Home
Mobile

புதிய படைப்புகளுடன் அசத்தும் பான்டெக் மொபைல்ஸ்!

By Super
புதிய படைப்புகளுடன் அசத்தும் பான்டெக் மொபைல்ஸ்!

சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும் பான்டெக் நிறுவனத்தை பற்றி இங்கே ஒரு சூடான தகவல் காத்திருக்கிறது. நடந்து முடிந்த 2012 கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷேவில் பான்டெக் நிறுவனம், பர்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போனையும், எலிமெண்ட் என்ற டேப்லட்டையும் அறிமுகம் செய்தது. இந்த இரண்டு சாதனங்களையும் பற்றிய சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.

முதலாவது, பர்ஸ்ட் ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ தொழில் நுட்பத்தினை கொண்டது. இது 4 இஞ்ச் சூப்பர் அமோல்டு திரை வசதியை கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டியூவல் கேமரா வசதி உள்ளது.

5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ கேமராவினையும் வழங்கும். இதனால் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை சுலபமாக பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் பற்றி மிக முக்கியமாக சொல்ல வேண்டிய, விசேஷமான விஷயம் இதன் ஓஎஸ்.

பல வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான, ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் ரெட், டைட்டானியம் என்ற இரண்டு நிறங்களை கொண்டது. அடுத்ததாக பான்டெக் நிறுவனத்தின் இன்னொரு படைப்பான எலிமெண்ட் டேப்லட் பற்றியும் சில தகவல்கள் உள்ளது.

இந்த டேப்லட் 8 இஞ்ச் திரையை கொண்டது. டிஎப்டி எக்ஸ்ஜிஏ டைப் திரை தொழில் நுட்பத்தினையும் இதில் பெறலாம். இந்த டேப்லட்டில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒன்று 5 மெகா பிக்ஸல் கேமரா, இனொன்று 2 மெகா பிக்ஸல் கேமரா. இது வீடியோ காலிங் வசதிக்கு உதவும். இதில் ஆற்றல் வாய்ந்த 6,400 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதனால் 12 மணி நேரம் தொடர்ந்து பேக்கப்பை கொடுக்கும்.

இந்த டேப்லட்டில் சிறந்த தொழில் நுட்பம் என்னவென்றால், இது வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டது. இந்த புதிய எலக்ட்ரானிக் சாதனத்ங்களின் விலை இதுவரை தெரியவரவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X