பான்டெக் வழங்கும் 'ஃபர்ஸ்ட் கிளாஸ்' ஸ்மார்ட்போன்!

இந்த ஆண்டு கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் ஒரு அற்புதமான பேன்டெக் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பர்ஸ்ட் எல்டிஇ என்ற பெயரில் வரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் சூப்பர் அமோல்டு மல்டி தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். இந்த பேன்டெக் பர்ஸ்டு எல்டிஇ ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் பெற விரும்பும் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குகிறது.
இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ஸ்கார்பியன் டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஐஸ்கிரீம் சேன்ட்விச் ஓஎஸ் தொழில் நுட்ப வசதியினையும் அப்கிரேட் செய்யலாம் என்ற தகவல்களும் வெளி வந்துள்ளது.
ஆனால் அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதில் இருக்கும் 16ஜிபி மெமரியை, 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். மைக்ரோஎஸ்டி, மைக்ரோஎஸ்டிஎச்சி கார்டு வசதிக்கு இதன் மெமரி கார்டு ஸ்லாட் சப்போர்ட் செய்கிறது.
புளூடூத், யூஎஸ்பி போன்ற தகவல் பரிமாற்ற, பதிவேற்ற தொழில் நுட்ப சவுகரியத்தை பெறவும் இதில் வழி இருக்கிறது. பிரவுசிங் வசதியை பெற முடியுமா? என்ற கேள்வியே தேவையில்லை. இதில் வைபை வசதியும், புளூடூத் வசதியும் உள்ளது. யூஎஸ்பி 2.0 தொழில் நுட்பத்தினையும் இந்த பேன்டெக் ஸ்மார்ட்போன் வழங்கும்.
இது போல் ஸ்மார்ட்போன் என்ற சொன்ன உடன் என்ன வசதிகளை எல்லாம் வாடிக்கையாளர்கள் எதிர் பார்ப்பார்களோ, அத்தனை வசதிகளும் இதில் இருக்கும். இந்த பேன்டெக் பர்ஸ்ட் எல்டிஇ ஸ்மார்ட்போன் சிறந்த வசதிகளை கொடுக்கும் ஒரு மொபைலாக இருக்கும்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் என்பதால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்களின் ஆர்வம் புரிந்த பேன்டெக் நிறுவனம் வெகு விரைவில் இதன் விலையை அறிவிக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications