Home
Mobile

ரூ.6,490/- என்ற சூப்பர் பட்ஜெட் விலையில் பானாசோனிக் பி91.!

நீலம், தங்கம் மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும்

By Muthuraj

பானாசோனிக் தனது ஸ்மார்ட்போன் போர்ட்டில், பி91 என்றவொரு புதிய உறுப்பினரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் ரூ.6,490/- என்ற சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவில் அறிமுகமாகியுள்ளது மற்றும் நாட்டில் உள்ள அனைத்து பனசோனிக் நிலையங்களிலும் கிடைக்கும்.

நீலம், தங்கம் மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் இந்த பானாசோனிக் பி91 ஆனது 1280 x 720 பிக்ஸல் என்ற அளவிலான திரை தீர்மானம் கொண்ட 5 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

128 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு

128 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு

1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு உடன் இணைந்த 1.1ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியாடெக் எம்டி6737எம் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக நினைவகத்தை 128 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு வழங்கும்.

8 மெகாபிக்சல் பின்புற கேமரா

8 மெகாபிக்சல் பின்புற கேமரா

இக்கருவியின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இதன் கேமரா வெவ்வேறு முறைமைகளில் வருகிறது.

எக்ஸ்போஷர் மதிப்பை சரிசெய்தல்

எக்ஸ்போஷர் மதிப்பை சரிசெய்தல்

க்யூஆர் குறியீடுகளைக் ஸ்கேன் செய்யும் திறன், தானாகவே காட்சியைக் கண்டறிதல், ப்ரேம் செட் அப், எக்ஸ்போஷர் மதிப்பை சரிசெய்தல், ரெக்கார்ட் டைம் லேப்ஸ், மற்றும் படங்களையும் கைப்பற்றுவதற்கான தேவையான புகைப்படதொழில்முறைகளை கொண்டுள்ளது.

2500எம்ஏஎச் பேட்டரி

2500எம்ஏஎச் பேட்டரி

பி91 ஆனது ஆ0ண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் இது 2500எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.ஆன்லைனில் 6 மணிநேரம் மற்றும் ஆஃப்லைன் வீடியோ பின்னணியில் 9 மணிநேரத்தை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், இது வைஃபை 802.11 பி/ ஜி/ என், ப்ளூடூத் 4.0, 4ஜி எல்டிஇ, இரட்டை சிம் ஆதரவு, அர்ப்பணிக்கப்பட்ட மைக்ரோ எஸ்டி ஸ்லாட், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

போட்டி

போட்டி

அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயத்தின் கீழ்றி பார்த்தால், இக்கருவி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சியோமி ரெட்மீ 1 லைட், மோட்டோரோலா மோட்டோ சி பிளஸ், யூ யூனிக் 2 பிளஸ் மற்றும் ஸ்வைப் எலைட் நோட் 4ஜி போன்ற ஸ்மார்ட்போன்களுக்கான போட்டியாக வெளியிடப்பட்டிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Panasonic P91 with 5-inch display launched in India but seems to be an underdog. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X