Just In
- 1 hr ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 2 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 3 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 3 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- News
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிச.18-ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்- சீமான்
- Movies
லவ்வர் போட்டோவை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அள்ளும் லைக்ஸ்.. குவியும் வாழ்த்து!
- Finance
அமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..!
- Automobiles
டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சினிமாவை விஞ்சும் நிஜ கதை!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறும் ரூ.5599/-க்கு கிடைக்கும் பானாசோனிக் பி90-ல் நம்பமுடியாத ஒரு அம்சம்.!
ஜப்பானிய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பானாசோனிக், இந்தியாவில் அதன் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும் நோக்கத்தின் கீழ் அதன் பானாசோனிக் பி90 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பானாசோனிக் பி90 ஆனது நிறுவனத்திடம் இருந்து வாங்க கிடைக்கும் மிக மலிவான நுழைவு-நிலை ஸ்மார்ட்போன் ஆகும். இவ்வழியாக நாட்டில் வெளியாகியுள்ள பிற பி தொடர் ஸ்மார்ட்போன்களுடன் இது இணைகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் - ப்ளூ, கோல்ட் மற்றும் பிளாக் - வாங்க கிடைக்கும். ரூ.5,599/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் வருகிறது, இது இந்த விலை வரம்பில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் அறியப்படாத ஒரு அம்சமாகும். மேலும், இது ஒரு ஆஃப்லைன் மாடலாக வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் எந்த சில்லறை கடைகளில் இருந்தாலும் வாங்கலாம்.

கார்னிங் கொரில்லா கண்ணாடி தொழில்நுட்பம்.!
பானாசோனிக் பி90 என்பது பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போனை விட சிறந்த பதிப்பு என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் (பி95 ஆனது சில வாரங்களுக்கு முன்பு ரூ.4,990/-க்கு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது). பி90-ன் அம்சங்களை பொறுத்தமட்டில், 720 x 1280 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்பிளேவின் மேலே ஒரு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு உள்ளது, அது கார்னிங் கொரில்லா கண்ணாடி தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

இரண்டு கேமராக்களுமே எல்இடி ப்ளாஷ்தனை வழங்குகின்றன.!
இது மீடியாடெக் எம்டி6737 சிப்செட் உடனான 1ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இணைந்துள்ளது. உடன் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவையும் வழங்குகிறது. கேமராவை பொறுத்தமட்டில், பானாசோனிக் பி90 ஆனது அதன் பின்புறத்தில் 5எம்பி ரியர் மற்றும் முன்பக்கத்தில் 5 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ப்ளாஷ்தனை வழங்குகின்றன.

ஜீரோ ஷட்டர் டிலே, பியூட்டி மோட் மற்றும் பனோரமா மோட்.!
இந்த பானாசோனிக் ஸ்மார்ட்போன் ஆனது கேமராக்கள் மீது அதிக கவனத்தை செலுத்தியுள்ளது. அதாவது, இதன் கேமரா ஆப்பில் பல்வேறு மோட்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஜீரோ ஷட்டர் டிலே, பியூட்டி மோட் மற்றும் பனோரமா மோட் (Zero Shutter Delay, Beauty mode and Panorama mode) போன்றவைகளை குறிப்பிட்டு கூறலாம்.

2400எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும்.!
ஸ்மார்ட் ஆக்ஷன்ஸ் மற்றும் ஸ்மார்ட் கெஸ்டர்ஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆதரவு கொண்ட ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. ஒரு 2400எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போனின் அளவீடுகளை பொறுத்தவரை 9.3மிமீ தடிமனை கொண்டுள்ளது.

அனைத்து அடிப்படை சென்சார்களையும் கொண்டுள்ளது.!
மேலும் இந்த பானாசோனிக் பி90 ஆனது அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற அனைத்து அடிப்படை சென்சார்களை கொண்டுள்ளது. மேலும் பல பானாசோனிக் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790