இந்தியா : கூடுதல் மெமரி கொண்ட பானாசோனிக் பி77 அறிமுகம்(அம்சங்கள்).!
பானாசோனிக் பி77 ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது.
கடந்த வருடம் பானாசோனிக் பி77 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது புதிய முயற்சியாக 16ஜிபி கூடுதல் மெமரி திறமையுடன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது . கடந்த வருடம் 8ஜிபி மெமரியுடன் இந்த பானாசோனிக் பி77 ஸ்மார்ட்போன் வெளிவந்தது.
பானாசோனிக் பி77 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.5.299-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனை அமேசான் வலைதளத்தில் மிக எளிமையாக வாங்க முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இப்போது புதுப்பிக்கப்பட்ட இந்த மாடல் வெள்ளை மற்றும் சாம்பல் நிற வகைகளில் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு:
இந்த பானாசோனிக் பி77 ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது. அதன்பின் குவாட்-கோர் 1ஜிகாஹெர்ட்ஸ் செயலி மற்றும் 1ஜிபி ரேம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (720-1280)பிக்சல்கள் தீரமானம் கொண்டவையாக உள்ளது இந்த பானாசோனிக் பி77 ஸ்மார்ட்போன்.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை , ப்ளூடூத் , 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2000எம்ஏஎச்:
பானாசோனிக் பி77 ஸ்மார்ட்போனில் பொதுவாக 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications