மலிவு விலையில் பானாசோனிக் பி101 அறிமுகம்.!
பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது பானாசோனிக் நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல்-சிம் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதன்பின்பு பானாசோனிக் பி101 சாதனத்திற்கு ரூ.2000 கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது ஐடியா நிறுவனம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை ரியர் கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆஃப்லைன் ஸ்டோர்களில் கூட இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பானாசோனிக் பி101 :
பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் திர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு:
பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த பானாசோனிக் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக 145 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


விலை:
பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலைப் பொறுத்தவரை ரூ.6,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








