ரூ.3,999-விலையில் அசத்தலான பானாசோனிக் பி95 அறிமுகம்.!

|

இந்தியாவில் தனது பி95 ஸ்மார்ட்போன்களை பானாசோனிக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயங்கும் பி95 ஃபோன், 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. ரூ.4,999 என்ற விலை நிர்ணயத்தில் உள்ள இந்த ஃபோன், ஃபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே விற்பனையில் அறிமுக விலையாக வெறும் ரூ.3,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த விற்பனை, இம்மாதம் 13 முதல் 16 வரை நடைபெற உள்ளது.

ரூ.3,999-விலையில் அசத்தலான பானாசோனிக் பி95 அறிமுகம்.!


இந்த ஃபோனில் 1ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளக நினைவகம் காணப்படுகிறது. இதை ஒரு மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 128ஜிபி ஆக உயர்த்த முடியும். 2300 எம்ஏஹெச் பேட்டரியில் இருந்து ஆற்றலைப் பெறும் இந்த ஃபோன், ஆன்ட்ராய்டு நெவ்கட் 7.1.2 இல் இயங்குகிறது. இதில் பிரிந்த திரை, தொகுக்கப்பட்ட அறிவிப்புகள் போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன.

பி95 இல் கேமராவைப் பொறுத்த வரை, பின்பக்கத்தில் 8எம்பி கேமரா உள்ளதோடு, எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஒரு 5எம்பி முன்பக்க கேமராவைப் பெற்றுள்ளது. ஸீரோ ஷட்டர் லேக் அம்சத்தின் மூலம் எந்தொரு தாமதமும் இல்லாமல் படங்களை எடுக்க முடிகிறது. தொழில்நுட்ப முறையில் வெளிப்பாட்டை கட்டுபடுத்துவதோடு, சிவப்பு கண்கள் தன்மையைக் குறைக்கிறது. தானியங்கி காட்சி கண்டுபிடிப்பு முறையில், பின்னணி சூழ்நிலை மற்றும் நேரலை வடிகட்டிகள் ஆகியவற்றை ஃபோனில் உள்ள கேமரா தானாக சரிசெய்து கொள்கிறது. இந்த கேமராவில் சிபியா, மோனோ மற்றும் அக்வா ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் லாக்கிங் அம்சங்கள்: நம்பகமான முகம் கண்டறியும் தன்மை மற்றும் நம்பகமான சத்தம் கண்டறியும் பண்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த அம்சங்களின் மூலம் தங்கள் ஃபோனை ஒரு முறை பார்த்து அல்லது ஃபோன் உடன் பேசினால் லாக் திறக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட் லாக் மூலம் கார் அல்லது வீடு போன்ற நம்பிக்கைக்குரிய இடங்கள் மற்றும் ப்ளூடூத் சாதனங்களுக்கு, பயனருக்காக ஃபோன் லாக் திறக்கிறது. உடல் கண்டறியும் அம்சத்தின் மூலம் பயனரின் கையில் இருக்கும் வரை ஃபோன் லாக் ஆகாமல் இருக்கும். ஆனால் அது மற்ற இடத்திற்கு சென்ற உடன் உடனடியாக தானாக லாக் ஆகிவிடுகிறது.

கடந்த மாதம், 'அர்போ ஹப்'-பை அறிமுகம் செய்த இந்நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர படிப்பினை ஆகிய பகுதிகளை விரிவாக்கம் செய்துள்ளது. அர்போ ஹப் என்பது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு ஹப் ஆகும். இதன்மூலம் பானாசோனிக் ஸ்மார்ட்போன் பயனர்களால், ஒற்றை தளத்திலேயே பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளை அணுக முடியும்.

எல்லாவற்றிற்கும் ஏற்ற கோ-டு அப்ளிகேஷனாக விளங்கும் அர்போ ஹப், பயனர்களின் குறிப்பிட்ட தேவைகள், விருப்பங்களை அறிந்து, ஒற்றை தளத்தில் எல்லா சேவைகளையும் அளிக்கிறது. இதன்மூலம் ஸ்மார்ட்போனில் பல்வேறு அப்ளிகேஷன்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் தவிர்க்கப்படுகிறது. ஓலா, அக்குவெதர், நியூஸ்பாயிண்ட், மொபிவிக் மற்றும் கேம்சூப் போன்ற அப்ளிகேஷன்களுடன் இந்நிறுவனம் கைகோர்த்து கொண்டு, பயனருக்கு பல்வேறு விதமான தளங்களை அளிக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எலுகா ரே 700 ஃபோனை பயன்படுத்துபவர்களுக்கு, ஒரு ஏர் அப்டேட் (எஃப்ஓடிஏ) மூலமாக அப்போ ஹப் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் அடுத்து வெளியாக உள்ள பானாசோனிக் பி85 என்எக்ஸ்டி மற்றும் இலுகா ரே 710 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை குறித்த அறிவிப்பையும் பனாசோனிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவற்றில் மேற்கூறிய கோ-டு அப்ளிகேஷன் இடம்பெற்றிருக்கும்.

Best Mobiles in India

English summary
Panasonic launches P95 for Rs 3,999 exclusively on Flipkart; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X