செல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்; பைத்தியக்கார பானாசோனிக்.!

அந்த ஸ்மார்ட்போன் பானாசோனிக் டஃப்புக் FZ-T1 என்று அழைக்கப்படுகிறது. ஒரு கற்பனைக்கு எட்டாத, ஒரு மிகப்பெரிய விலையின் கீழ் ஐரோப்பாவில் அறிமுகமாகி உள்ள இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்ன.?

|

பானாசோனிக் நிறுவனம் இன்று அதன் டஃப்புக் ஸ்மார்ட்போன் வரிசையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அந்த ஸ்மார்ட்போன் பானாசோனிக் டஃப்புக் FZ-T1 என்று அழைக்கப்படுகிறது. ஒரு கற்பனைக்கு எட்டாத, ஒரு மிகப்பெரிய விலையின் கீழ் ஐரோப்பாவில் அறிமுகமாகி உள்ள இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்ன.? அப்படி என்னதான் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் விரிவாக காண்போம்.

இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Toughbook ஸ்மார்ட்போன்கள் எல்லாம் நுழைவு நிலை அம்சங்களை கொண்டிருந்தன. இருந்தாலும் கூட பானாசோனிக் நிறுவனம் அவைகளை பிரீமியம் விலைக்கு அறிவித்தது. ஆனால் தற்போது அறிமுகம் ஆகியுள்ள பானாசோனிக் டஃப்புக் FZ-T1 ஆனது, MIL-STD 810G, IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ், க்வாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி, 5-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் அதிர்ஷ்டவசமாக ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ போன்ற பல பிரதான அம்சங்களை கொண்டு பிரீமியம் விலைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

பானாசோனிக் டஃப்புக் FZ-T1 அம்சங்கள்.!

பானாசோனிக் டஃப்புக் FZ-T1 அம்சங்கள்.!

சில்லறை வர்த்தகத்தை மனதில் கொண்டு வெளியாகியுள்ள இந்த பானாசோனிக் ஸ்மார்ட்போனில் பார்கோடு ரீடர் உள்ளது (இதனுள் உட்பொதிக்கப்பட்டுள்ள பார்கோடு ஸ்கேனருக்கு நன்றி). மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஷெல்ஃப் ஸ்டாக்கிங் மற்றும் மேலும் பல சில்லறை வியாபா அம்சங்களும் உள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக, சரக்கு மேலாண்மை, ஆவணப்படுத்தல் பிடிப்பு, வழிசெலுத்தல் பராமரிப்பு போன்ற பீல்ட் வொர்க் செய்ய உதவும் அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது 1.5 மீட்டர் ஆழம் வரை தண்ணீருக்குள் தாக்குப்பிடிக்கும்.!

இது 1.5 மீட்டர் ஆழம் வரை தண்ணீருக்குள் தாக்குப்பிடிக்கும்.!

மேற்க்குறிப்பிட்டுள்ளபடி, பானாசோனிக் FZ-T1 ஆனது இராணுவ தரநிலை 810G க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஐபி 68 தூசி மற்றும் நீர் எதிர்க்கும் திறன் கொண்டது, இது 1.5 மீட்டர் ஆழம் வரை தண்ணீருக்குள் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது. மேலும் -10 முதல் 50சி வெப்பநிலை வரம்பிற்குள் இயக்கப்படும் தன்மையை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் பானாசோனிக் காம்ப்ஸ் (முழுமையான ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் சேவைகள்) 2.0 போன்ற மேலாண்மை அம்சங்களுடன் வருகிறது.

3ஜிபி அளவிலான ரேம்.!

3ஜிபி அளவிலான ரேம்.!

தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, பானாசோனிக் FZ-T1 ஆனது 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இது ஒரு கரடுமுரடான ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் வண்ணம் க்ளவ் மற்றும் ரெயின் மோட் போன்றவைகளுடன் வருகிறது. இந்த பானாசோனிக் ஸ்மார்ட்போன் ஒரு குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் APQ8009 சிப்செட் உடனாக 3ஜிபி அளவிலான ரேம் உடன் இணைந்து செயல்படுகிறது.

3200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.!

3200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.!

ஒரு முன்பக்கம் எதிர்கொள்ளும் செல்பீ கேமரா இல்லாத போதும் கூட ஒரு 8 எம்பி ரியர் கேமராவை அதன் பின் பக்கத்தில் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது ஒரு நாளுக்கு தேவையான முழுமையான பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. அளவீட்டில் 240 கிராம் மற்றும் 13.1 மிமீ தடிமன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்கும்.

பானாசோனிக் டஃப்புக் FZ-T1 விலை.!

பானாசோனிக் டஃப்புக் FZ-T1 விலை.!

பனசோனிக் டஃப்புக் FZ-T1 ஆனது வைஃபை திறனை கொண்டுள்ளது. ஆகஸ்ட் 2018 முதல் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையானது தோராயமாக ரூ.1,02,345/- ஆகும். 4ஜி வாய்ஸ் மற்றும் டேட்டா வெர்ஷன் ஆனது செப்டம்பர் 2018 முதல் வாங்க கிடைக்கும். அதன் விலை சுமார் ரூ.1,08,800/- ஆகும். ஐரோப்பா முழுவதும் கிடைக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரு நிலையான மூன்று ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Panasonic Launches a New Rugged Android Smartphone With Mediocre Specifications. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X