ரெட்மீ 5-க்கு அடி; சூப்பர் பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 550.!
ரூ.8,999/- என்கிற சூப்பர் [பட்ஜெட் விலை நிர்ணயத்தின் கீழ் வெளியாகியுள்ள பானாசோனிக் எலுகா ரே 550 ஆனது சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5-க்கு எதிராக கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
பானாசோனிக் இந்தியா அதன் 18: 9 டிஸ்ப்ளே ஸ்மார்டான் ஆன பானாசோனிக் எலுகா ரே 550-ஐ இன்று அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சங்களாக இதன் யுனிமெட்டல் பாடி டிசைன் மற்றும் 5.7-இன்ச் 18: 9 டிஸ்பிளேவை கூறலாம்.

ரூ.8,999/- என்கிற சூப்பர் [பட்ஜெட் விலை நிர்ணயத்தின் கீழ் வெளியாகியுள்ள பானாசோனிக் எலுகா ரே 550 ஆனது சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5-க்கு எதிராக கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
அதற்கு ஏற்ற வண்ணம், க்வாட்கோர் ப்ராசஸர், அர்போ விர்ச்சுவல் அசிஸ்டண்ட் மற்றும் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா ஆகிய நியாமான அம்சங்களை கொண்டுள்ளது. ஏப்ரல் 5, 2018 தொடங்கி, இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும். இது ஒரு பிளாஷ் விற்பனை அல்ல, ஒரு திறந்த விற்பனையாகும் என்பதும், பானாசோனிக் எலுகா ரே 550 ஆனது கடந்து ஆண்டு வெளியான பானாசோனிக் எலுகா ரே 500-ன் மேம்பட்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்சங்களை பொறுத்தவரை, 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட ஒரு 5.7 இன்ச் எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது. 1.3ஜிகாஹெர்ட்ஸ் உடனான க்வாட்-கோர் மீடியாடெக் எம்டிகே6737எச் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கப்படக்கூடியது.
முன்னர் குறிப்பிட்டபடியே, ரே 550 ஆனத்தூபி ஒரு யுனிமெட்டல் பாடி வடிவமைப்பு கொண்டு வருகிறது. பின்பக்கத்தில் எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13எம்பி கேமராவும், முன்பக்கத்தில் எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 8எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும் ரே 550 ஆனது பானாசோனிக் நிறுவனத்தின் அர்போ விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டை தன்னுள் கொண்டுள்ளது. இது பயனரின் அன்றாட செயல்பாட்டு கண்காணித்து, அதன் வழியிலான கற்றலை நிகழ்த்தும் செயற்கை நுண்ணறிவு திறனாகும்.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, எலுகா ரே 550 ஒரு கைரேகை ஸ்கேனர், ஸ்மார்ட் லாக் மற்றும் ட்ரஸ்டட் வாய்ஸ் (Trusted Voice) போன்ற மிகுதியான பாதுகாப்பு விருப்பங்களை கொண்டு வருகிறது. இணைப்பு அம்சங்களை பொறுத்தமட்டில், 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது
ஒரு 3250எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வண்ண விருப்பங்களில்- - கருப்பு, நீலம் மற்றும் தங்கம் - விற்பனைக்கு வருகிறது. ரூ.7,999/க்கும் (2ஜிபி ரேம்) மற்றும் ரூ.8,999/-க்கும் (3 ஜிபி ரேம்) வாங்க கிடக்கம் சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனிற்கு எலுகா ரே 550 கடும் போட்டியை விளைவிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications