பானாசோனிக் இலுகா ஐ2 ஆக்டிவ் சிறப்பம்சங்கள் என்னென்ன?
பானாசோனிக் இலுகா ஐ2 ஆக்டிவ் பொறுத்தவரை குவாட்கோர் 1.2ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் ஏ53 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு வந்த பானாசோனிக் இலுகா ஏ3 மற்றும் இலுகா ஏ3ப்ரோ பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் அந்தவரிசையில் இப்போது பானாசோனிக் இலுகா ஐ2 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடுகிறது அந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
இலுகா ஐ2 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.7190 எனக் கூறப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ ஆதரவு இடம்பெற்றுள்ளது, மேலும் இதன்வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

5-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1280)பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0:
பானாசோனிக் இலுகா ஐ2 ஆக்டிவ் பொறுத்தவரை குவாட்கோர் 1.2ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் ஏ53 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

16ஜிபி மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் 1ஃ2ஜிபி ரேம் வித்தியாசங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
பானாசோனிக் இலுகா ஐ2 ஆக்டிவ் பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

2200எம்ஏஎச்:
பானாசோனிக் இலுகா ஐ2 ஆக்டிவ் 2200எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டவையாக உள்ளது, அதன்பின் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையா செயல்படும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications