அதிரடி விலைக்குறைப்பு : பானாசோனிக் எலுகா ரே மேக்ஸ்.!

|

இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பானாசோனிக் எலுகா ரே மேக்ஸ் இப்போது ரூ.1,000/- விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.11,499/- என்ற விலை நிர்ணயம் கொண்ட எலுகா ரே மேக்ஸ் கருவியின் 32 ஜிபி வேரியண்ட் ஆனது தற்போது ரூ.10,499/-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 அதிரடி விலைக்குறைப்பு : பானாசோனிக் எலுகா ரே மேக்ஸ்.!

மறுபக்கம் ரூ. 12,499/- என்ற விலை நிர்ணயம் கொண்ட 604 ஜிபி வேரியண்ட் தற்போது ரூ.11,999/-க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக கிடைக்கிறது, மேலும் இது மூன்று வண்ண விருப்பங்களில் - தங்கம், விண்வெளி சாம்பல் மற்றும் ரோஸ் - கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருவிகளின் அம்சங்களை நினைவுபடுத்தும் வகையில், எலுகா ரே மேக்ஸ் ஆனது கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்புடன் 5.2 அங்குல முழு எச்டி 2.5 டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளேயுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 சிப்செட் உடனான அட்ரெனோ 505 ஜிபியூ கொண்டு இயக்கப்படுகிறது.

 அதிரடி விலைக்குறைப்பு : பானாசோனிக் எலுகா ரே மேக்ஸ்.!

மேலும் டூயல் சிம் ஆதரவு கொண்ட இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்ட 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது மேலும் பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவும் கொண்டுள்ளது.

இக்கருவியில் இரண்டு மாறுபாடுகள் உள்ளன, ஒரு 32 ஜிபி உள் சேமிப்பு, மற்றும் ஒரு 64 ஜிபி உள் சேமிப்பு ஆதரவு கொண்டு வருகிறது, இரண்டும் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. எலுகா ரே மேக்ஸ் ஆனது எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது மற்றும் முன்பக்கம் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. கைபேசியின் முன்பக்கம் கைரேகை ஸ்கேனர் கொண்ட இக்கருவியில் வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி, ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு விருப்பங்கள் உள்ளன.

பானாசோனிக் எலுகா ரே மேக்ஸ் ஆனது நிறுவனத்தின் சொந்த ஸ்மார்ட் ஏஐ அசிஸ்டென்ட் ஆன - அர்போ கொண்டு இயங்கும். இந்த புதிய மெய்நிகர் உதவியாளர் ஒரு சுய-கற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் பயனரின் நடத்தை புரிந்துகொண்டு அதன்படி அதனுடன் அவற்றின் அன்றாட நடவடிக்கைகளை இணைக்கிறது மற்றும் அழைப்பு, செய்திகளை போன்ற வழக்கமான நடவடிக்கைகளையும் கவனித்து கொள்கிறது.

மேலும் இது ஸ்மார்ட்போனில் செயல்படும் அனைத்து பயன்பாடுகளின் விரிவான பட்டியலையும் வைத்திருக்கிறது, அவற்றின் பழக்கவழக்கங்கள் குறித்த விரிவான தகவல்களை சேகரித்து அதற்கேற்ப அவற்றைப் பற்றி தெரிவிக்கிறது. அதன் 'இருப்பிட அடையாளம்' அம்சத்துடன், பயனர் அடிக்கடி பார்வையிட்ட இடங்களை அங்கீகரித்து, அவற்றின் தொலைபேசி அமைப்புகளில் மாற்றங்களைச் செய்ய உடனடி பதில்களையும் அனுப்புகிறது.

Best Mobiles in India

English summary
Panasonic Eluga Ray Max price slashed by up to Rs 1,000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X