ரூ.9,999/-க்கு 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பானாசோனிக் எலுகா ரே 700.!
இக்கருவி ரூ,9,999/- என்ற விலைக்கு வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி 12 மணி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும்.
முன்னர் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்ட எலுகா ரே 500 ஸ்மார்ட்போனை தொடர்ந்து இப்போது பானாசோனிக் எலுகா ரே 700 பட்டியலிடப்பட்டுள்ளது. குறைந்த விலை நிர்ணயம் கொண்ட எலுக ரே 500 சாதனத்தின் பிரதான சிறப்பம்சமாக அதன் டூயல் கேம் திகழ்ந்தது போல எலுகா ரே 700 ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது.

இக்கருவி ரூ,9,999/- என்ற விலைக்கு வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி 12 மணி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும். விரைவில் வெளியாகும் என்ற குறிச்சொல்லை கொண்டுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் செவ்வாயன்று (இன்று) புதுதில்லி நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பவுள்ளது.
பானாசோனிக் எலுகா ரே 700 சாதனத்தின் அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி இரட்டை சிம், ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட். 5.5-அங்குல எச்டி (1080x1920 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே, 1.3ஜிகாஹெர்ட்ஸ், ஆக்டா-கோர் மீடியா டெக் எம்டிகே6753 எஸ்ஓசி, 3 ஜிபி ரேம் ஆகிய பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

பானாசோனிக் எலுகா ரே 500 சாதனத்தின் இரட்டை பின்புற கேமராக்கள் போலல்லாமல், ரே 700 ஆனது எப் / 2.0 துளை, எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் கேமரா மட்டுமே கொண்டுள்ளது. முன்பக்ககமும் அதே (பிளாஷ் ஆதரவுடனான) 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வசதி கொண்டு பானாசோனிக் எலுகா ரே 700 வெளிவருகிறது.
மறுபக்கம் பானாசோனிக் எலுகா ரே 500 ஆனது அளவீட்டில் 153.75x75.35x8.9 மிமீ மற்றும் 182 கிராம் எடையுள்ளது. 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், வைஃபை, 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளோடு உட்பொதிக்கப்ட்ட கைரேகை சென்சார் பொத்தான் ஒன்றும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








