Home
Mobile

ரூ.4500/- தள்ளுபடி; 4000எம்ஏஎச்; பானாசோனிக் எலுகா ஐ3 மெகா இந்தியாவில் விற்பனை.!

தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ஸ்னாப்டீலில் ரூ.6,999/-க்கு கிடைக்கிறது. அதாவது ரூ.4500/- என்கிற தள்ளுபடியின்கீழ் கிடைக்கிறது.

By Muthuraj

பானாசோனிக் நிறுவனத்தின் மூலம் கடந்த ஆண்டு ரூ.11,490/-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட எலுகா ஐ3 மெகா ஸ்மார்ட்போன் ஆனது பனாசோனிக் அங்கீகாரம் பெற்ற சில்லறை விற்பனையாளர்கள் மூலம் இந்தியாவில் தற்போது கிடைக்கிறது.

ரூ.11,490/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இந்த பானாசோனிக் எலுகா ஐ3 மெகா ஸ்மார்ட்போனின் ஒரு சிறப்பம்சமாக அதன் 4000எம்ஏஎச் பேட்டரி திறன் திகழ்கிறது. பானாசோனிக் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தளத்தின்படி, எலுகா ஐ3 மெகா ஆனது ஒரு அனைத்து உலோக உடலமைப்பு கொண்ட கருவியாகும்.

ரூ.4500/- என்கிற தள்ளுபடி

ரூ.4500/- என்கிற தள்ளுபடி

தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ஸ்னாப்டீலில் ரூ.6,999/-க்கு கிடைக்கிறது. அதாவது ரூ.4500/- என்கிற தள்ளுபடியின்கீழ் கிடைக்கிறது. பானாசோனிக் எலுகா ஐ3 மெகா ஆனது ஷாம்பெயின் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய விருப்பங்களில் வருகிறது.

16ஜிபி ஆன்-போர்ட் சேமிப்பு

16ஜிபி ஆன்-போர்ட் சேமிப்பு

அம்சங்களை பொறுத்தமட்டில், 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டிகே6735 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஆன்-போர்ட் சேமிப்புடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தையும் ஆதரிக்கிறது.

கேமரா

கேமரா

13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ள இக்கருவி இது ஷாம்பெயின் தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பானாசோனிக் எலுகா ஐ3 மெகா 154.6x77x9.4 மிமீ மற்றும் 180 கிராம் எடையுடையது.

இரட்டை சிம்

இரட்டை சிம்

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் வோல்ட் உடனான 4ஜி ஆதரவிற்கு துணைபுரிகிறது. இரட்டை சிம்மை (மைக்ரோ + நானோ) ஆதரிக்கும் இந்த தொலைபேசியின் "முழு உலோக உடல் வடிவமைப்பு ஸ்டைலான இளைஞர்களை இலக்காக கொண்டுள்ளது.

பயண விரும்பிகளுக்கான தீர்வு

பயண விரும்பிகளுக்கான தீர்வு

மேலும் இதன் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5.5 அங்குல டிஸ்ப்ளே திரை சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை விரும்பும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கான தீர்வாய் அமையும்" என்று பங்கஜ் ரான (பிசினஸ் ஹெட், மொபிலிட்டி டிவிஷன், பானாசோனிக்) தெரிவித்துள்ளார்.

பானாசோனிக் எலுகா ஐ3

பானாசோனிக் எலுகா ஐ3

மறுகையில் உள்ள பானாசோனிக் எலுகா ஐ3 ஆனது ரூ.9,749/-க்கும் மற்றும் ரூ.10,899/-க்கும் முறையே ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் வாங்க கிடைக்கிறது. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Panasonic Eluga I3 Mega with 4000mAh battery now available online for Rs 6,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X