Home
Mobile

இந்திய அறிமுகம் : பானாசோனிக் எலுகா ஐ3 மெகா (விலை, அம்சங்கள்).!

இந்த பானாசோனிக் எலுகா ஐ3 மெகா ஸ்மார்ட்போனின் ஒரு சிறப்பம்சமாக அதன் 4000எம்ஏஎச் பேட்டரி திறன் திகழ்கிறது.

By Muthuraj

பானாசோனிக் நிறுவனத்தின் புதிய எலுகா ஐ3 மெகா ஸ்மார்ட்போன் ஆனது பனாசோனிக் அங்கீகாரம் பெற்ற சில்லறை விற்பனையாளர்கள் மூலம் இந்தியாவில் தற்போது கிடைக்கிறது. ரூ.11,490/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இந்த பானாசோனிக் எலுகா ஐ3 மெகா ஸ்மார்ட்போனின் ஒரு சிறப்பம்சமாக அதன் 4000எம்ஏஎச் பேட்டரி திறன் திகழ்கிறது.

பானாசோனிக் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தளத்தில் எலுகா ஐ3 மெகா அனைத்து உலோக உடலமைப்பு கொண்ட கருவி என்றும் 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 2.5டி வளைவு கிளாஸ் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

செயலி

செயலி

1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டிகே6735 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஆன்-போர்ட் சேமிப்புடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தையும் ஆதரிக்கிறது.

கேமரா

கேமரா

13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ள இக்கருவி இது ஷாம்பெயின் தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பானாசோனிக் எலுகா ஐ3 மெகா 154.6x77x9.4 மிமீ மற்றும் 180 கிராம் எடையுடையது.

இரட்டை சிம்

இரட்டை சிம்

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் வோல்ட் உடனான 4ஜி ஆதரவிற்கு துணைபுரிகிறது. இரட்டை சிம்மை (மைக்ரோ + நானோ) ஆதரிக்கும் இந்த தொலைபேசியின் "முழு உலோக உடல் வடிவமைப்பு ஸ்டைலான இளைஞர்களை இலக்காக கொண்டுள்ளது.

பயண விரும்பிகளுக்கான தீர்வு

பயண விரும்பிகளுக்கான தீர்வு

மேலும் இதன் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5.5 அங்குல டிஸ்ப்ளே திரை சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை விரும்பும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கான தீர்வாய் அமையும்" என்று பங்கஜ் ரான (பிசினஸ் ஹெட், மொபிலிட்டி டிவிஷன், பானாசோனிக்) தெரிவித்துள்ளார்.

எலுகா ரே மற்றும் பி85

எலுகா ரே மற்றும் பி85

இந்த மாத தொடக்கத்தில், பானாசோனிக் இந்தியா எலுகா ரே மற்றும் பி85 ஆகிய கருவிகளை முறையே ரூ.7,999/- மற்றும் ரூ.6,499/- என்ற விலைக்கு அறிமுகம் செய்ததும், இரண்டு சாதனங்களும் ப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எலுகா ஐ3

எலுகா ஐ3

இந்த எலுகா ஐ3 மெகா என்பது ரூ.9,290/- என்ற விலைக்கு அறிமுகமான எலுகா ஐ3 கருவியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Panasonic Eluga I3 Mega Launched in India: Price, Specifications, and More. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X