பானாசோனிக் எலுகா சி: வித்தியாசமான செல்பீ கேம் + டூயல் கேம் + 3-பக்க பெஸல்லெஸ்.!

|

ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான பானாசோனிக், ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நிறுவனத்தின் முதல் பெஸல்லெஸ் ஸ்மார்ட்போனின் வருகை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எலுகா சி: வித்தியாசமான செல்பீ கேம் + டூயல் கேம் + 3-பக்க பெஸல்லெஸ்.!

பானாசோனிக் எலுகா சி என்ற பெயரின்கீழ் வெளியாகும் இக்கருவி மிகவும் துல்லியமாக ஒரு 3-பக்க பெஸல்லெஸ் வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த பானாசோனிக் ஸ்மார்ட்போன் ஆனது சில ஷார்ப் அக்வாஸ் வரம்புகளிலிருந்தும், மற்றும் டூஜீ ஸ்மார்ட்போன்களில் இருந்தும் நிறைய வடிவமைப்பு ஒற்றுமையை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.

குறைந்த அளவிலான பெஸல்

குறைந்த அளவிலான பெஸல்

நீங்கள் படங்களில் பார்க்க முடிவதுபோல், பானாசோனிக் எலுகா சி ஆனது அதன் மூன்று பக்கங்களிலும் குறைந்த அளவிலான பெஸல்களை கொண்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட்போனின் தாடை பகுதி மிகவும் பெரியதாக உள்ளது.

டிஸ்பிளேவின் கீழே முன் எதிர்கொள்ளும் கேமரா

டிஸ்பிளேவின் கீழே முன் எதிர்கொள்ளும் கேமரா

தற்செயலாக, எலுகோ சி கருவியின் முன்பலகத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் மற்றும் முன் எதிர்கொள்ளும் கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த அம்சத்தில், பானாசோனிக் டிஸ்பிளேவின் கீழே முன் எதிர்கொள்ளும் கேமராவை உட்படுத்துவதை சியோமியின் வடிவமைப்பு அணுகுமுறையுடன் சென்றுள்ளது.

5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளே

5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளே

சுமார் 0.3 வினாடிகளில் இந்த ஸ்மார்ட்போனை திறக்க, அதன் கைரேகை சென்சார் உதவுமென மதிப்பிடப்படுகிறது. மேலும் இந்த பானாசோனிக் எலுகா சி ஆனது 5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டு வருகிறது.

ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்

ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்

இதன் பிரதான சிறப்பம்சமாக இதன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் 84.6% ஆகும் என்பதுதான். குறைவான ரெசல்யூஷன் கொண்டிருந்தாலும் கூட, இதன் டிஸ்பிளேவின் ப்ரைட்னஸ் லெவல் 450 நிட்ஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

சேமிப்பு

சேமிப்பு

உள்ளடக்கங்களை பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு சராசரி மீடியா டெக் எம்டி6750டி சிப்செட் கொண்டுள்ளது. உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு கொண்டு இணைந்துள்ளது. இந்த பானாசோனிக் சாதனம் ஒற்றை சேமிப்பு மாறுபாட்டில் தான் வெளியாகும் என்பது போல் தெரிகிறது.

இரண்டு கேமராக்கள்

இரண்டு கேமராக்கள்

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக, 256 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கத்திற்கான ஆதரவு கொண்டுள்ள இக்கருவியின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், இதன் பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன- 13எம்பி முதன்மை கேமரா உடன் இரண்டாம் நிலை 5எம்பி கேமரா.

1080பி தரத்திலான வீடியோ

1080பி தரத்திலான வீடியோ

இதன் பின்புற கேமராவானது 30எப்பிஎஸ் வேகத்தில் 1080பி தரத்திலான வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறுகிறது. இதன் எல்லா கேமிராக்களுமே எப்/ 2.2 என்கிற அஃபெக்ஷர் அளவை கொண்டுள்ளன.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

இந்த சாதனம் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு இல்லாத ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. மேலும் சாதனத்தின் இணைப்பு விருப்பங்களை பார்த்தால் - 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகள் அடங்கும். இதன் முதல் சிம் ஸ்லாட் 4ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும், இராமதாம் ஸ்லாட் 3 ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும்.

ரூ.13,000/- என்ற புள்ளியை எட்டலாம்

ரூ.13,000/- என்ற புள்ளியை எட்டலாம்

தற்போது வரையிலாக, இந்த ​​ஸ்மார்ட்போன் டிடபுள்யூடி 6000 என்கிற விலைக்கு தென் கொரியாவில் மட்டுமே கிடைக்கிறது. இந்திய விளைநிர்ணயத்தின்படி இது ரூ.13,000/- என்ற புள்ளியை எட்டலாம். பானாசோனிக் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவிலும் மற்ற சந்தைகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதா என்கிற விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Panasonic Eluga C With 5.5-inch Display, 3-Side Bezel-Less Design Goes Official. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X