ரெட்மீயை காலி செய்ய களமிறங்கிய 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பானாசோனிக்.!
இந்தியாவில் மிகவும் பிரபலமான எலுகா ஏ3 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட மாறுபாடான எலுகா ஏ4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆண்டிற்கு முன்னதாக வருகிற 2017-ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் மொத்தம் 15 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் மற்றும் அவைகள் அனைத்துமே ரூ.15,000/-க்குள் என்ற பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்டு அறிமுகமாகுமென்றும் பானாசோனிக் அறிவித்தது.
ஜப்பானிய மொபைல் தயாரிப்பாளரான பானாசோனிக் நிறுவனம் ஏற்கனவே எலுகா ஏ3 மற்றும் எலுகா ஏ3 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, இந்தியாவில் மிகவும் பிரபலமான எலுகா ஏ3 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட மாறுபாடான எலுகா ஏ4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

12கே விலைப்புள்ளி.!
புதிய அறிமுகமான பானாசோனிக் எலுகா ஏ4 ஆனது ரூ.12,490/- என்ற பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்டுள்ளது. இந்த 12கே விலைப்புள்ளியானது சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 4 மற்றும் மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் ஆகிய கருவிகளுக்கு பலத்த போட்டியை உண்டாகும் என்பதில் சந்தகேமேயில்லை.

மிகப்பெரிய 5000எம்ஏஎச் பேட்டரித்திறன்.!
எலுகா ஏ4 ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சமாக அதன் மிகப்பெரிய 5000எம்ஏஎச் பேட்டரித்திறன் திகழ்கிறது. இதுவொரு நீக்க முடியாத பேட்டரி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற 5000எம்ஏஎச் பேட்டரித்திறன்பா கொண்ட பானாசோனிக் எலுகா ரே700 ஆனது இந்த ஆண்டு முன்னதாக அறிமுகமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

5.2 அங்குல எச்டி டிஸ்பிளே.!
எலுகா ஏ4 ஸ்மார்ட்போனை இதர அம்சங்களை பொறுத்தமட்டில், 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.2 அங்குல எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இக்கருவி 1.25ஜிகாஹெர்ட்ஸ் உடனான க்வாட்-கோர் மீடியா டெக் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

3 ஜிபி ரேம் + 32 ஜிபி.!
சேமிப்புத்திறனை பொறுத்தமட்டில், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறனை கொண்டுள்ளது. ரூ.12,490/- என்ற விலை நிர்ணயத்தில் ஒரே ஒரு மாறுபாட்டில் (3 ஜிபி ரேம் / 32 ஜிபி ரோம்) மட்டுமே வெளியாகியுள்ள்ளது.

13 எம்பி + 5 எம்பி.!
ஒளியியல் (கேமராத்துறை) அடிப்படையில், எலுகா ஏ4 ஆனது ஒரு எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 5எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவும் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்கள்ளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஏஆர்பிஓ (ARBO) பெர்சனல் அசிஸ்டென்ட்.!
பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் பானாசோனிக் எலுகா ஏ4 ஆனது பானாசோனிக் நிறுவனத்தின் சொந்தமான ஏஆர்பிஓ (ARBO) பெர்சனல் அசிஸ்டென்ட் கொண்டுள்ளது. இது எலுகா ரே மேக்ஸ் மற்றும் எலுகா ரே எக்ஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பனாசோனிக் அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம்.!
பானாசோனிக் எலுகா ஏ4 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ஆஃப்லைன்-ஒன்லி மாடல் ஆகும். நேற்று முதல் (நவம்பர் 5) இந்தியா முழுவதும் உள்ள பனாசோனிக் அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம் வாங்குவதற்கு கிடைக்கிறது. மேலும் பல ஸ்மார்ட்போன் வெளியீடு, அம்சங்கள், விலை நிர்ணயம், ஒப்பீடு சார்ந்த அப்டேட் செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.!


Click it and Unblock the Notifications