Home
Mobile

இந்திய சந்தைகளில் மட்டும் வெளியாகும் - நோக்கியா 3310.!

"நிச்சயமாக மற்ற உயர் இறுதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுடன் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 3310 மாடல் கருவியையும் சேர்த்தே அறிமுகப்படுத்தும்"

By Muthuraj

நோக்கியா 3310 தான் இப்போது ஒரு உலக அளவிலான பேச்சு தலைப்பு எனலாம். ஏனெனில் நோக்கியா பி1, நோக்கியா டி1சி, நோக்கியா 8, நோக்கியா 3 மற்றும் மேலும் பல நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளுடன் நோக்கியா காதலர்களுக்காகவே மீண்டும் கிளாஸிக் மாடலான நோக்கியா 3310 கருவி வெளியிடப்படவுள்ளது என்பது உறுதியாகிவிட்டது.

இந்திய சந்தைகளில் மட்டும் வெளியாகும் - நோக்கியா 3310.!

நோக்கியா நிறுவனத்தின் இந்தியா சார்ந்த ஒரு ஸ்மார்ட்போன் வியாபாரி கூறுகையில், நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் நிச்சயமாக மற்ற உயர் இறுதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுடன் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 3310 மாடல் கருவியையும் சேர்த்தே அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

முட்டை வடிவத்தில்

முட்டை வடிவத்தில்

கிடைக்கப்பெற்ற இந்த தகவலுக்கு பலம் சேர்க்கும் வண்ணம் எச்எம்டி நிறுவனம் முற்றிலுமாக நோக்கியா 3310 வடிவமைப்பு மற்றும் அதன் தோற்றத்தை சீரமைத்துள்ளது போல் தெரிகிறது அதாவது ஓவல் வடிவத்தில் (முட்டை வடிவத்தில்) நோக்கியா 3310 கருவி தயாரிக்கப்படும் என்று தோன்றுகிறது.

பல வண்ணங்களில்

பல வண்ணங்களில்

மேலும் நோக்கியா 3310 கருவிகள் முன்னர் போலின்றி மிகவும் உன்னதமான ஒரு நோக்கியா சாதனமாக இருக்கும் மற்றும் வெளிப்படையாக பல வண்ணங்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறு அறிமுகம்

மறு அறிமுகம்

நினைவுகூறும் வண்ணம், வரவிருக்கும் நோக்கியா 3310 மாடல் ஆனது ஒரு பிரீமியம் பதிப்பாக வெளியாகும் மற்றும் வதந்திகளின்படி நிகழப்போகும் மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017-ல் இக்கருவி மறு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான

மலிவான

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் ரூ.3000 - ரூ.3500/- என்பதற்கு இடையே எங்கோ ஒரு புள்ளியில் மிகவும் மலிவான ஒரு சாதனமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகளை மட்டும்

இந்திய சந்தைகளை மட்டும்

துரதிர்ஷ்டவசமாக, சாதனம் பற்றிய மேலும் பல தகவல்களை இப்போது அறிய முடியவில்லை. இருப்பினும் எப்போது இக்கருவி நம் கைகளில் கிடைக்கும் மற்றும் இக்கருவி சார்ந்த வெளியீடு பற்றிய புதிய வதந்திகளின்படி நோக்கியா 33100 கருவியானது வரும் மே மாத இறுதியில் இந்திய சந்தைகளை மட்டும் வந்தடையும் என்று தெரியவந்துள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்

எனினும், வெளியான அறிக்கைகள் நோக்கியா 3310 கருவிகள் ஆனது மிக குறைந்த அளவில் தான் கிடைக்கும் என்றும் அறிவிக்கிறது. இரட்டை சேனல் மூலோபாயம் முயற்சியாக பிற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போலின்றி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் நோக்கியா சாதனங்கள் விற்பனை செய்ய திட்டமிடப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா 8 : வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது.!

Best Mobiles in India

English summary
Oval-shaped, colorful Nokia 3310 to hit Indian shores in May. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X