உடையவே உடையாது.. உலகின் முதல் ஸ்லிம் ரக்டு போன்.. ரூ.14,999 விலையில் மிலிட்டரி கிரேட் தரம்.. எந்த மாடல்?
ரக்டு ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் யுக்கிடேல் (Oukitel) நிறுவனம் இப்போது உலகின் முதல் ஸ்லிம்மஸ்ட் ரக்டு 5ஜி ஸ்மார்ட்போன் (World's first slimmest 5G rugged smartphone) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 11,000mAh பேட்டரியுடன் மிரட்டலாக களமிறங்கியுள்ளது. இதுபற்றிய முழுவிபரம் இதோ.
உடைக்கவே முடியாத மிகவும் உறுதியான, மிலிட்டரி கிரேட் தரத்தில், ஸ்மார்ட் அம்சங்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து, மிகவும் உறுதியான ரக்டு ஸ்மார்ட்போன் சாதனமாக உருவாக்கி வழங்கும் மிகவும் பிரபலமான நிறுவனம் தான் இந்த யுக்கிடேல் (Oukitel) பிராண்ட். யுக்கிடேல் நிறுவனம் இதுவரை பல்கியான (Bulky) பல ரக்டு ஸ்மார்ட்போன் (Rugged Smartphone) சாதனங்களை வெளியிட்டு விற்பனை செய்து வந்துள்ளது.

யுக்கிடேல் WP35 ரக்டு 5ஜி ஸ்மார்ட்போன் (Oukitel WP35 Rugged 5G Smartphone):
ரக்டு ஸ்மார்ட்போன் என்று சொன்னாலே, உடைக்க முடியாத உறுதி என்ற எண்ணத்தை தாண்டி, வழக்கமான ஸ்மார்ட்போன் போல்லலாமல் பெரிய அளவில் குண்டாகவோ அல்லது மொந்தையான தோற்றத்திலோ ஒரு ஸ்மார்ட்போன் சாதனம் நம் கண் முன்னே வந்து மறையும். இந்த எண்ணத்தை இப்போது யுக்கிடேல் நிறுவனம் உடைத்துள்ளது. ஆம், உலகின் மிகவும் ஸ்லிம் ஆன ரக்டு ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது.
இதை நிறுவனம் யுக்கிடேல் WP35 (Oukitel WP35) என்ற பெயருடன் மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. Oukitel WP35 சாதனம் வழக்கமான ஸ்மார்ட்போன் சாதனங்களில் அளவில், ரக்டு ஸ்மார்ட்போன்களின் உறுதியையும், அம்சத்தையும் இணைத்து 5ஜி ஆதரவுடன் வழங்கி இந்த முறை அசத்தியுள்ளது. இந்த சாதனம் 14.9mm தடிமன் கொண்ட மிகவும் உறுதியான மிலிட்டரி கிரேட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது IP68 மற்றும் IP69K வாட்டர்ப்ரூப் ரேட்டிங்கையும் பெறுகிறது.
இதன் காரணமாக ஒட்டுமொத்த உலகின் கவனத்தை Oukitel WP35 தற்போது ஈர்த்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகின்றன என்பதை இப்போது பார்க்கலாம். புதிய யுக்கிடேல் WP35 ரக்டு ஸ்மார்ட்போன் (Oukitel WP35 Rugged Smartphone) சாதனம் 6.6" இன்ச் அளவு கொண்ட 2048 x 1080 பிக்சல் திறம் கொண்ட 2.4K டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மிகவும் துல்லியமான மற்றும் கிரிஸ்டல் கிளியர் விசுவலை வழங்குகிறது.

யுக்கிடேல் WP35 விலை (Oukitel WP35 Price):
இந்த மிகவும் உறுதியான ஸ்லிம்மஸ்ட் ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ சிப்செட் (MediaTek Dimensity 6100+ Chipset) உடன் 8ஜிபி ரேம் (RAM) + 256ஜிபி ஸ்டோரேஜ் (Storage) அம்சத்தை இணைத்து வழங்குகிறது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த சாதனத்தை 24ஜிபி ரேம் + 2TB ஸ்டோரேஜ் வரை உங்களால் கான்ஃபிக்கரேஷன் செய்துகொள்ள முடியும்.
இந்த புதிய யுக்கிடேல் WP35 ரக்டு மொபைல் (Oukitel WP35 Rugged Mobile) சாதனம் 64MP + 8MP + 2MP ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் வருகிறது. இதில் 64MP சென்சார் Sony IMX682 ஆக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு 1/1.73" இன்ச் இமேஜ் சென்சார் என்பது கவனிக்கத்தக்கது. இதில் உள்ள 8MP லென்ஸ் ஐ ஆர் நைட் விஷன் கேமராவாகவும் (IR Night Vision camera) செயல்படுகிறது.
முன்பக்கத்தில் இந்த சாதனம் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 11,000mAh பேட்டரியை வழங்குகிறது. இது 5ஜி இணக்கத்துடன் இயங்கும் ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இது $179 டாலர் விலையில் மே 13, 2024 முதல் மே 17, 2024 வரை நாட்களுக்குள் மட்டும் வாங்க கிடைக்கும். இந்திய மதிப்பில் இது வெறும் ரூ.14,999 மட்டுமே. அதன் பிறகு $249.99 டாலர் விலையில் விற்பனை செய்யப்படும். AliExpress வழியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








