Home
Mobile

போடு தகிடதகிட.. ரூ.16,000 பட்ஜெட்ல ஐபோன் லுக்கு.. 24GB ரேம்.. 1TB மெமரி.. பரபரப்பாக விற்பனையில் Oukitel..

ஓகிடெல் (Oukitel) பிராண்ட் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் ஒரு சூப்பரான 5ஜி ஸ்மார்ட்போன் (5G smartphone) மாடலை மிகவும் குறைந்த விலையில் தரமான அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. ரக்டு ஸ்மார்ட்போன் (Rugged smartphone) மற்றும் மிலிட்டரி தரத்தில் தயாரிப்புகளை (Military grade products) உருவாக்கி விற்பனை செய்து வரும் ஓகிடெல் நிறுவனம் தற்போது ஓகிடெல் சி50 5ஜி (Oukitel C50 5G) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் ஸ்லிம் ஆன மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஓகிடெல் (Oukitel) புதிதாக அறிமுகம் செய்துள்ள ஓகிடெல் சி50 5ஜி (Oukitel C50 5G) ஸ்மார்ட்போன் சாதனம் பார்ப்பதற்கு ஐபோன் (iPhone) போல காட்சியளிக்கிறது. இருப்பினும், இது மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாதனமாக திகழ்கிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இதன் அசல் விலை $269 டாலர் (dollar) ஆகும். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 22,450 விலையை நெருங்குகிறது.

போடு தகிடதகிட.. ரூ.16,000 பட்ஜெட்ல ஐபோன் லுக்கு.. 24GB ரேம்..1TB மெமரி

ஓகிடெல் சி50 5ஜி (Oukitel C50 5G):

ஆனால், தற்போது அறிமுக சலுகையாக இந்த போனை நிறுவனம் வெறும் $199 டாலர் விலைக்கு வழங்கி வருகிறது. அதாவது, இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக வெறும் ரூ.16,000 மட்டுமே. ஓகிடெல் சி50 5ஜி (Oukitel C50 5G) ஸ்மார்ட்போனின் மீதான இந்த அறிமுக சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஓகிடெல் வலைத்தளம் (Oukitel website) வழியாக இதை ஆர்டர் செய்துகொள்ளலாம்.

7 முதல் 15 நாட்களுக்கும் போன் டெலிவரி செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓகிடெல் சி50 5ஜி (Oukitel C50 5G) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இது 6.8" இன்ச் அளவு கொண்ட கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ (MediaTek Dimensity 6100+) சிப்செட் (Chipset) உடன் வருகிறது. இதுவொரு பட்ஜெட் செக்மென்ட் 5ஜி சிப்செட் மாடலாகும்.

இது 24GB ரேம் (RAM) உடன் 128GB ஸ்டோரேஜ்ஜை வழங்குகிறது. மைக்ரோஎஸ்டி கார்டு (microSD card) மூலம் 1TB வரையிலான ஸ்டோரேஜ் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த Oukitel C50 5G ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 5150mAh கொண்ட பேட்டரியை (Battery) பேக் செய்கிறது. பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பேக் செய்துள்ளது.

ரூ.16,000 பட்ஜெட்ல ஆப்பிள் ஐபோன் ப்ரோ லுக்கில் புது 5G மொபைல்:

ஓகிடெல் சி50 5ஜி (Oukitel C50 5G) கேமரா அம்சத்திலும் எந்தவித குறைபாடையும் வைக்கவில்லை. இந்த ஓகிடெல் சி50 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 50MP பிரைமரி கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இதன் கேமரா மாட்யூல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ப்ரோ சாதனங்களில் காணப்படுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது ஒரு தனி கவனத்தை ஈர்க்கிறது. இது பேஸ் ஐடி (Face ID) மற்றும் பிங்கர் பிரிண்ட் (Finger Print) போன்ற பாதுகாப்பு அம்சத்தை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oukitel C50 5G Mobile 24GB RAM 128GB Storage 1TB Memory 50MP Camera Budget Price Under Rs 16999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X