ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்கு சவால் விடுமா எல்ஜி ஆப்டிமஸ் ஜி2?

By Karthikeyan
|
ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்கு சவால் விடுமா எல்ஜி ஆப்டிமஸ் ஜி2?

எல்ஜி நிறுவனம் ஆப்டிமஸ் ஜி2 என்ற ஒரு புதிய போனை விரைவில் களமிறக்குகிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த போனை ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இணையாகப் போட்டி போடும் அளவிற்கு இந்த போனைக் கண்ணும் கருத்துமாக தயாரித்து வருகிறது.

குறிப்பாக இந்த போனில் உள்ள டிஸ்ப்ளே மற்றும் ப்ராசஸர் ஆகியவற்றில் வெகு சிரத்தை எடுத்து சூப்பராக தயாரித்து வருகிறது. இந்த போன் மே 2013ல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. அதற்கு இந்த போனை அம்சமாக மற்றும் புதுமையாக எல்ஜி தயாரித்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்பாக இந்த போனில் இருக்கும் டிஸ்ப்ளேயில் உள்ள 440 பிக்சல்கள் ஆப்பிளின் ரெட்டினா டிஸ்ப்ளேயில் உள்ள பிக்சல்களைவிட 1.5 மடங்கு அதிகம். மேலும் இந்த போனில் இருக்கும் துல்லியம் 40 இன்ச் முழு எச்டி டிவியில் இருக்கும் திரையில் இருக்கும் துல்லியத்தைவிட 6 மடங்கு அதிகம். மேலும் வரும் காலங்களில் அமோலெட் டிஸ்ப்ளேயை தனது ஸ்மார்ட்போன்களில் வைக்க சோனி திட்டமிட்டிருக்கிறது.

மேலும் இந்த ஆப்டிமஸ் ஜி2 போனில் 2.0 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு 5.0 கீ லைம் பீ என்ற இயங்கு தளத்தையும் வைக்க எல்ஜி திட்டமிட்டிருக்கிறது. அதனால் இந்த சோனியின் புதிய போன் அடுத்த தலைமுறைக்கான சூப்பர் போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஆப்பிள், சாம்சங், எச்டி மற்றும் நோக்கியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் போன்களை சந்தையில் கடை விரித்திருக்கின்றன. அவற்றின் போன்களும் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்கின்றன. இந்த நிலையில் எல்ஜியின் இந்த புதிய போன் வெற்றி பெற ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டி இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்4 என்ற ஒரு புதிய போனைத் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கேலக்ஸி எஸ்4 போனுக்கு சமமாக எல்ஜியின் ஆப்டிமஸ் ஜி2 இருக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கேலக்ஸி எஸ்4 போன் 5 இன்ச் அமோலெட் எச்டி டிஸ்ப்ளே, 441 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 2ஜிஹெர்ட்ஸ் குவாட் கோர் கோர்டெக்ஸ் எ15 ப்ராசஸர், 13எம்பி பின்பக்க கேமரா மற்றும் ஆன்ட்ராய்டு 5.0 கீ லைம் பீ இயங்குதளம் மற்றும் 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி, மற்றும் 128ஜிபி ஆகிய மாடல்களில் வர இருக்கிறது. இந்த போன் 2013ல் நடைபெற இருக்கும் நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சி அல்லது மொபைல் உலக காங்கிரஸ் ஆகிய நிகழ்வுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் ஐபோன் 5ன் ரெட்டினா டிஸ்ப்ளே தொழில் நுட்பம் 2012ல் வந்த புதிய ஐபட் திரையில் இருக்கும் 300 பிபிஐ தொழில் நுட்பத்தைவிட பிரமாதமாக இருக்கவில்லை. அதனால் ஐபோன் 5எஸ் என்ற புதிய போனை தயாரிக்கும் வேலையில் ஆப்பிள் தீவிரமாக இருக்கிறது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் இந்த போன்களோடு மல்லுக்கட்ட எல்ஜி தயாராகிவிட்டது. இந்த போட்டியி்ல் எல்ஜி ஆப்டிமஸ் ஜி2 வெல்லுமா என்பது அடுத்த ஆண்டு தெரிந்துவிடும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X