இண்டர்நெட் இல்லாமல் ஃபைல்கள் பரிமாற்றம்: சியாமியுடன் இணைந்த கூட்டணி
சர்வதேச சந்தையில் முன்னணி இடத்தை பிடிக்க ஒப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து ஒரு புதிய தொழில்நுட்ப கூட்டணியை அமைத்துள்ளன. இந்த புதிய கூட்டணி நம்முடைய மொபைல் போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபைல்களை ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு இண்டர்நெட் கனெக்சன் இல்லாமலேயே பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அளித்துள்ளது.

மிக எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்
எனவே மேற்கண்ட மூன்று நிறுவனங்களின் மொபைல் போன்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது ஃபைல்களை எந்தவித பிரச்சனையும் இன்றி மிக எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த பரிமாற்றம் மொபைலில் உள்ள அதிக வேகத்துடன் கூடிய நேரடி ஃவைபை கனெக்சன் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

பி2பி
ஃபைல்கள் பரிமாற்றம் செய்யப்படும்போது அந்த ஃபைல்கள் புளூடுத் லோ எனர்ஜி மூலம் முதலில் ஸ்கேன் செய்யப்படுகிறது. அதன்பின்னர் குறைந்த பவரின் உதவியால் ஃபைல்கள் பி2பி வைஃபை என்ற டெக்னாலஜி மூலம் பரிமாற்றம் செய்கிறது. இது புளூடூத் பரிமாற்றத்தை விட வேகமாக செய்வது மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் இண்டர்நெட் வசதி இல்லாமலேயே இந்த பரிமாற்றம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ஃபைல்கள் 20எம்பிஸ் வேகத்தில் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அண்டி வூ
இதுகுறித்து ஒப்போ நிறுவனத்தின் சாப்ட்வேர் எஞ்ஜினியரிங் பிசினஸ் பிரிவின் துணைத்தலைவர் அண்டி வூ என்பவர் கூறியபோது, ‘ஒப்போ, விவோ மற்றும் சியாமி நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இதன் மூலம் எந்தவித சிரமமும் இன்றி ஃபைல்களை பரிமாற்றம் செய்து கொள்வார்கள் என்றும் அவரகளுக்கு இந்த வசதி மிகவும் பயனுடையதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இப்போதைக்கு முதல்கட்டமாக இந்த மூன்று நிறுவனங்கள் கைகோர்த்து வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வசதியை செய்து தந்துள்ளதாகவும் மிக விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு போன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து நிறுவனங்களுடன் கைகோர்ப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கலர்ஸ் ஓஎஸ்7
இந்த பரிமாற்றம் முறை மிகவும் எளிதானது என்றும், ஒப்போ நிறுவனத்தின் கலர்ஸ் ஓஎஸ்7 இன்ஸ்டால் செய்திருந்தால் அதில் புதியதாக ஷேர் பட்டன் ஒன்று இருக்கும் என்றும், அதை ஆக்டிவேட் செய்தால் விவோ மற்றும் சியாமி போன்களுக்கு ஃபைல்களை பரிமாற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையால் பயனாளிகள் மிக எளிதாக ஃபைல்களை அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கலர்ஸ் ஓஎஸ் 7, தற்போது சோதனை வெர்ஷனாக ரெனோ 2, ரெனோ 10X ஜூம், F11 புரோ, F11 புரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிடெட் பதிப்பு மற்றும் F11 ஆகியவற்றில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரெனோ சீரீஸ், ஆர் சீரீஸ், F சீரிஸ், ஏ சீரீஸ் மற்றும் K3 ஆகியவற்றில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications