அதே டெய்லர், அதே வாடகை! முந்திக்கொண்ட TECNO.. பொங்கி எழுந்த OPPO.. சூடுபிடித்த Tri Fold Smartphone கான்செப்ட்!
Oppo Tri Fold Smartphone Concept: ஒருகாலத்தில் கான்செப்ட்களில் (Concept) மட்டுமே நாம் பார்த்து வந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் (அதாவது மடங்கக்கூடிய அல்லது மடக்கக்கூடிய டிஸ்பிளேவை கொண்ட ஸ்மார்ட்போன்கள்) தற்போது மிகவும் சகஜமாகி விட்டன. உலகின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google) கூட 2 ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது. அந்த அளவிற்கு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் ஆனது நெக்ஸ்ட் லெவல் ஸ்மார்ட்போன்களாக உருமாறிவிட்டன. இதற்கிடையில்.. "அடுத்தது என்ன?" என்கிற போட்டி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளது.
அதுதான் மூன்றாக மடங்கக்கூடிய அல்லது மடக்கக்கூடிய டிஸ்பிளேக்களை கொண்ட ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் (Tri Fold Smartphone). பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த ஸ்மார்ட்போனில் மினிமல் பெசல்கள் உடனான ட்ரிபிள் டிஸ்பிளேக்கள் இருக்கும் மற்றும் அவைகள் டூயல்-ஹிஞ் மெக்கானிசத்தின் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும்.

சில தினங்களுக்கு முன்பு தான் டெக்னோ நிறுவனத்தின் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட் ஆக - டெக்னோ ஃபாண்டம் அல்டிமேட் 2 (Tecno Phantom Ultimate 2) காட்சிப்படுத்தி இருந்தது. உடனே ஒப்போ நிறுவனமும் அதன் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட்டை தற்போது வெளிப்படுத்தியுள்ளது. இந்த கான்செப்ட், ஒப்போ நிறுவனத்தின் ஒரு முக்கியமான அதிகாரியால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவாரசியமாக ஒப்போவின் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட் ஆனது டெக்னோவின் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட்டை போலவே உள்ளது. அதாவது மிகவும் மெலிதான ரெக்டாங்குலர் டிசைன், மிகவும் மெலிதான பெசல்களுடன் ட்ரிபிள் டிஸ்ப்ளேக்கள் மற்றும் டூயல்-ஹிஞ் பொறிமுறை ஆகியவைகளை கொண்டுள்ளது. ஆனால் இது பேக் பேனலில் லெதர் ஃபினிஷ் உடன் வரும் என்பது போல் தெரிகிறது.
மேலும் ஒப்போ ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் எந்த டிஸ்பிளேக்களிலும் செல்பீ கேமராவிற்கான ஹோல் -பஞ்ச் கட்அவுட் இருப்பதாக தெரியவில்லை. இது - அண்டர் டிஸ்பிளே சென்சார் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறிக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒப்போ நிறுவனம் அவசர அவசரமாக தனது ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட்டை வெளிப்படுத்தியுள்ளது போல் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதியே.. அதாவது 2 நாட்களுக்கு முன்பாகவே ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட் ஆன டெக்னோ ஃபாண்டம் அல்டிமேட் 2 மாடலை வெளிப்படுத்தி விட்டதால்.. இதேபோன்ற ஸ்மார்ட்போனை வெளியிட்ட இரண்டாவது நிறுவனம் என்கிற பெயர் தான் - ஒப்போவிற்கு கிடைத்துள்ளது.
ஆனால் "இந்த ட்ரை ஃபோல்ட்" போட்டியில் மற்றொரு சீன நிறுவனமான ஹூவாய் தான் கிங் ஆக இருக்கப்போகிறது. ஏனென்றால், இது கூடிய விரைவில் தனது ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை சந்தைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் - இப்படி ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் உலகின் முதல் நிறுவனமாக ஹூவாய் மாறும். இந்த ஸ்மார்ட்போன் 2024 அக்டோபரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னோ பாண்டம் அல்டிமேட் 2 ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களை பொறுத்தவரை, இது 6.48-இன்ச் கவர் டிஸ்பிளே மற்றும் 1620 x 2880 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட ஒரு பெரிய 10-இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 4:3 ரேஷியோவை கொண்டுள்ளது.
டெக்னோவின் படி, டிடிடிஐ (TDDI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டச் அன்ட் டிஸ்பிளே ட்ரைவர் இன்டெக்ரேஷன் (Touch and display driver integration) என்கிற தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் சந்தையின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் இதுவாகும். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் சிப் ஆனது டிஸ்பிளே ட்ரைவர் மற்றும் டச் சென்சார் ஆகிய இரண்டையும் தன்வசம் கொண்டிருக்கும்.
அளவீடுகளை பொறுத்தவரை, டெக்னோ பாண்டம் அல்டிமேட் 2 ஸ்மார்ட்போன் ஆனது 11 மிமீ மெல்லியதாக உள்ளது. இது மிகவும் சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட்டை விட 1.5 மிமீ அதிகமாகும். இருப்பினும் சந்தையில் உள்ள மற்ற புக்-ஸ்டைல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை போலவே ஸ்லிம் டிசைனை பெற்றுள்ளது.
மடிந்திருக்கும் போது, இது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 மாடலை விட சலின் ஆக உள்ளது. ஃபோல்ட் 6-ஐ மடிக்கும்போது அதன் தடிமன் 12.1 மிமீ ஆக உள்ளது. போதாக்குறைக்கு இது டூயல்-ஹிஞ் மெக்கானிசமையும் கொண்டுள்ளது. இது 300,000 ஃபோல்ட் மற்றும் அன்ஃபோல்ட் உள்ளடக்கிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக டெக்னோ கூறுகிறது.
எல்லாவற்றை விட முக்கியமாக இந்த ஸ்மார்ட்போனில் 0.25 மிமீ தடிமன் கொண்ட அல்ட்ரா-ஸ்லிம் பேட்டரியும் உள்ளது. டெக்னோவின் இந்த ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் கான்செப்ட் ஆனது காட்சிப்படுத்தப்பட்டாலும் கூட இது எப்போது உற்பத்திக்கு வரும் என்பதை டெக்னோ நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. Photo Credit: Weibo / Zhou Yibao (Via innoGyan)


Click it and Unblock the Notifications