ராசா.. உனக்காக தான் இங்க பல பேர் வெயிட்டிங்! ஒரே Phone-ல மூன்று 50MP கேமராக்கள்!

|

ஒப்போ நிறுவனம் இனி வரிசையாக 5ஜி போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதேசமயம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது ஒப்போ நிறுவனம். மேலும் இந்நிறுவனம் விரைவில் ஒப்போ Find X6 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன்

Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன்

தற்போது இந்த Oppo Find X6 Pro ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் E6 LTPO OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்

அதேபோல் Oppo Find X6 ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஃபர்னா அது இதுதான்! ரூ.7000 தள்ளுபடி விலையில் ஐபோன் 14 வாங்கலாம்.. மொத்த பேரையும் வாயடைத்த JioMart!ஆஃபர்னா அது இதுதான்! ரூ.7000 தள்ளுபடி விலையில் ஐபோன் 14 வாங்கலாம்.. மொத்த பேரையும் வாயடைத்த JioMart!

 256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவரும் இந்த போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் அட்மினுக்கு இவ்ளோ அதிகாரமா? WhatsApp கம்யூனிடிஸ் என்றால் என்ன? எப்படி உருவாக்குவது?குரூப் அட்மினுக்கு இவ்ளோ அதிகாரமா? WhatsApp கம்யூனிடிஸ் என்றால் என்ன? எப்படி உருவாக்குவது?

 50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

புதிய Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெடியா இருங்க! தங்க கிரகத்தை உடைக்கப் போகும் NASA.. இனி பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரன்!ரெடியா இருங்க! தங்க கிரகத்தை உடைக்கப் போகும் NASA.. இனி பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரன்!

Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன்

Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன்

Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன் ColorOS மற்றும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்புடன்
அறிமுகமாகும் புதிய Oppo Find X6 Pro ஸ்மார்ட்போன்.

இதை விட ஒரு நல்ல போன் கிடைக்க வாய்ப்பில்ல ராஜா.! Redmi சொன்ன நற்செய்தி.!இதை விட ஒரு நல்ல போன் கிடைக்க வாய்ப்பில்ல ராஜா.! Redmi சொன்ன நற்செய்தி.!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

Oppo Find X6 Pro ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன்இந்த போன் அறிமுகமாகும்.

TV வாங்கலயோ டிவி.. கூவி விற்காத குறையாக 43-இன்ச் மாடல்கள் மீது மரண ஆபர் போட்ட Amazon!TV வாங்கலயோ டிவி.. கூவி விற்காத குறையாக 43-இன்ச் மாடல்கள் மீது மரண ஆபர் போட்ட Amazon!

டிசம்பர் மாதம்

குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Oppo to launch New Pro Level Smartphone with three 50MP Cameras and 2K Display: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X