10 க்கு 10.. அம்புட்டு 5G போன்களையும் ஓரங்கட்டும் Oppo-வின் 3 புதிய போன்கள்; இந்திய அறிமுகம் உறுதி; என்ன விலை?
ஒப்போ ரெனோ 10 5ஜி சீரீஸ் (Oppo Reno 10 5G Series) ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் கீழ் மொத்தம் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதென்ன மாடல்கள்? எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் ரெனோ சீரிஸின் கீழ் ஒப்போ ரெனோ 10 5ஜி (Oppo Reno 10 5G), ஒப்போ ரெனோ 10 5ஜி ப்ரோ (Oppo Reno 10 Pro 5G) மற்றும் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் (Oppo Reno 10 Pro Plus 5G) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? ரெனோ 10 5ஜி சீரிஸ் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால், இந்த 3 போன்களின் அம்சங்கள் குறித்த எந்த குழப்பமும் இல்லை. குழப்பமெல்லாம் சீன வேரியண்ட்களுக்கும் இந்திய வேரியண்ட்களுக்கும் இடையே என்னென்ன வேறுபாடுகள் இருக்கும் என்பதில் தான்!
முதல் வேறுபாடு: இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ரெனோ 10 மற்றும் ஒப்போ ரெனோ 10 ப்ரோ ஆகியவை மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 SoC) மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், சீனாவில் அறிமுகமான வெண்ணிலா வேரியண்ட் ஆனது ஸ்னாப்டிராகன் 778G சிப்செட்டையும், ப்ரோ வேரியண்ட் ஆனது டைமன்சிட்டி 8200 சிப்செட்டையும் கொண்டுள்ளது.
கடைசியாக உள்ள ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சீன வேரியண்ட் ஆனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1 SoC) மூலம் இயக்கப்படுகிறது. சுவாரசியமாக இந்திய மாறுபாடும் இதே சிப்செட் உடன் வரும் என்று கூறப்படுகிறது.
இரண்டாவது வேறுபாடு: சிப்செட்களில் உள்ள மாற்றங்கள் மட்டுமின்றி, கேமராக்களிலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சீனாவில் அறிமுகமான 3 ஓப்போ ரெனோ 10 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவிற்கு வரும்போது, ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டுமே டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
இது தவிர்த்து, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உட்பட, சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களின் அனைத்து அம்சங்களும் இந்திய வேரியண்ட்களிலும் இடம்பெறும். நினைவூட்டும் வண்னம் ரெனோ 10 மற்றும் ரெனோ 10 ப்ரோ மாடல்களில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது; அதேசமயம் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
மற்ற பொதுவான அம்சங்களை பொறுத்தவரை, 3 மாடல்களுமே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) ஆதரவுடனான 6.7 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளன மற்றும் (வெவ்வேறு லென்ஸ்களை கொண்டிருந்தாலும்) ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பேக் செய்கின்றன.
ஒப்போ ரெனோ 10 5ஜி சீரிஸ் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதி குறித்த விவரஙகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட, ஒப்போ ரெனோ 10 5ஜி சீரீஸ் ஆனது வருகிற ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ ரெனோ 10 5ஜி சீரிஸ் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வெண்ணிலா வேரியண்ட் ஆன ரெனோ 10 5ஜி ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.29,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் ஆனது முறையே (தோராயமாக) ரூ.41,000 மற்றும் ரூ.45,000 க்கு வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








