10000mAh Battery உடன் புது OPPO போன்.. அம்புட்டு பிக் பேட்டரி போன்களையும் ஓரங்கட்டும் விலை!
கடந்த சில மாதங்களிலேயே ஸ்மார்ட்போன்களில் உள்ள பேட்டரி திறன்கள் வியக்கத்தக்க வகையில் வேகமாக அதிகரித்து விட்டன சில மாதங்களுக்கு முன்னர் வரையிலான 5500mAh - 6000mAh பேட்டரி இருந்தாலே "இது போதுமே" என்று இருந்தது. ஆனால் இப்போது 7000mAh என்றால் தான் "ஓகே ஓகே" என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்.
ஆகவே தான் ஓப்போ (OPPO) நிறுவனம் பேட்டரி கெப்பாசிட்டியில் - இதுவரை இல்லாத மிகப்பெரிய பாய்ச்சல்களில் ஒன்றை நிகழ்த்த தயாராகி வருகிறது. நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின் படி, ஒப்போ நிறுவனம் சுமார் 9,700mAh திறன் கொண்ட பேட்டரியுடன் கூடிய ஒரு புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை சோதனை செய்து வருகிறது.

இதன் டிபிக்கல் கெப்பாசிட்டி (Typical Capacity) 10,000mAh அளவை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்த லீக் (Leak) உண்மையானால், இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது 8000mAh - 9000mAh பேட்டரி என்கிற வரம்பில் உள்ள பல பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களை அசால்ட் ஆக தூக்கி சாப்பிட்டு விடக்கூடும்.
ஆனால் இப்போதைக்கு அது எந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்கிற எந்த தகவலும் இல்லை. ஆனால் அந்த ஒப்போ ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளன. அதன்படி, ஒப்போவின் வரவிருக்கும் 10,000mAh பேட்டரி ஸ்மார்ட்போன் ஆனது சுமார் 1.5கே ரெசல்யூஷன் கொண்ட ஒரு பிளாட் ஆன எல்டிபிஸ் (LTPS) டிஸ்பிளேவை கொண்டிருக்கும் மற்றும் 4என்எம்அடிப்படையிலான சிப்செட்டை பயன்படுத்தும்.
மேலும் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன், அதிக பாலிமர் தாக்கத்தை தாங்கும் பொருட்களையும், கீழே விழுவதை தாங்கும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட (சமீபத்திய பல ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள ஒப்போ நிறுவனத்தின்) டயமண்ட் ஆர்கிடெக்சர் வடிவமைப்பின் (Diamond architecture design) கூறுகளையும் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
என்ன விலை? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, 10000mAh பேட்டரி உடன் வரும் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் சீனாவில் சுமார் 2,000 யுவான் என்கிற விலையில் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 28,400 க்கு) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது பிரீமியம் பிரிவில் இல்லாமல், மிட்ரேன்ஜ் விலை பிரிவில் உறுதியாக நிலைநிறுத்தப்படலாம்.
கிஸ்பாட்டின் கருத்து: நினைவூட்டும் வண்ணம், கடந்த 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியான அறிக்கைகள், சுமார் 9750mAh திறன் மற்றும் 10000mAh-க்கு நெருக்கமான வழக்கமான மதிப்பை (typical value) கொண்ட ஒரு பெரிய சிங்கிள்-செல் பேட்டரி (single-cell battery) சோதனை உற்பத்தியில் நுழைவதாக குறிப்பிட்டிருந்தன.
அந்த நேரத்தில், இவ்வளவு பெரிய பேட்டரி ஆனது - ஒரு வணிக ரீதியான ஸ்மார்ட்போனில் வரும் என்பதை விட, எதிர்கால வன்பொருளின் ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அது உண்மையாகி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் சாதாரணமான விஷயமாக பார்க்கும் அளவிற்கு எளிமையாகி உள்ளது.
ரியல்மி பி4 பவர், ரியல்மி நார்சோ பவர், ஹானர் பவர் 2, ஹானர் வின் மற்றும் ஹானர் வின் ஆர்டி உட்பட, ரியல்மி மற்றும் ஹானர் நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே சில ஸ்மார்ட்போன்கள் 10,000mAh பேட்டரிகளுடன் வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது சீன சந்தையில், ஸ்மார்ட்போன்களில் 10,000mAh பேட்டரிகள் சர்வ சாதாரணமாகி விட்டால், மீதமுள்ள தொழில்துறை எவ்வளவு விரைவாக அதை பின்பற்றும் என்பதை பார்ப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications