போய் வா நண்பா.. 100MP 1:1 செல்பீ கேமராவுடன் புது OPPO போன்.. Apple-ன் சென்டர் ஸ்டேஜ் அம்சம் இப்போ Android-ல்!
கடந்த ஆண்டு ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) மாடல்களை அறிமுகப்படுத்தியபோது, அதன் சதுர வடிவ முன்பக்க கேமரா சென்சார் (square-shaped front camera sensor) மிகவும் அசாதாரணமான ஹார்ட்வெர் மாற்றங்களில் ஒன்றாக இருந்தது.
ஆப்பிள் இந்த அம்சத்தை 'சென்டர் ஸ்டேஜ்' (Center Stage) என்று அழைத்தது. இது ஸ்மார்ட்போனை சுழற்ற தேவையில்லாமல், செங்குத்து மற்றும் கிடைமட்ட ஆகிய இரண்டு நிலைகளிலும் தானாகவே படங்களை எடுக்க கேமராவை அனுமதிக்கிறது. இப்போது, ஆண்ட்ராய்டு பிராண்டுகளும் இதை பின்பற்ற தயாராகி வருவதாக தெரிகிறது.

ஒரு சதுர வடிவ செல்பீ சென்சாரின் மிகப்பெரிய நன்மை அதன் நெகிழ்வுத்தன்மை ஆகும். பாரம்பரிய செல்பீ கேமராக்கள் பொதுவாக செங்குத்து ஷாட்களுக்காக மேம்படுத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாக, வைட் ஆன செல்பீ வீடியோக்கள் அல்லது க்ரூப் போட்டோக்களை பதிவுசெய்ய, பயனர்கள் பெரும்பாலும் ஸ்மார்ட்போனை கிடைமட்டமாக சுழற்ற வேண்டியிருக்கும்.
ஆனால் 1:1 சதுர சென்சார் ஒரு லார்ஜ் இமேஜ் ஏரியாவை படம்பிடிப்பதன் மூலம் இந்த "செயல்பாட்டை" முற்றிலுமாக மாற்றுகிறது. இந்த தொழில்நுட்பம் ஏஐ அம்சங்களுடனும் நன்றாக பொருந்துகிறது. மேம்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள், நேரலைகள் மற்றும் ஷார்ட் பார்மெட் கன்டென்ட் உருவாக்கத்திற்காக, ஆட்டோமேட்டிக் சப்ஜெக்ட் சென்டரிங் மற்றும் இன்னும் வைட் ஆன பீல்ட்-ஆப்-வியூ அட்ஜெஸ்ட்மென்ட் போன்ற அம்சங்களுக்கு இது உதவியாக இருக்கும்.
ஒப்போவின் அடுத்த ஸ்மார்ட்போனில் சதுர வடிவ செல்பீ கேமரா இருக்கலாம்: டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய லீக்கின் படி, ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது 100எம்பி 1:1 சதுர வடிவ செல்பீ கேமரா சென்சாரை மதிப்பீடு செய்து வருகிறது.
குறிப்பிட்ட டிப்ஸ்டர் அந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் அவருடைய பதிவில் பகிரப்பட்ட எமோஜி, அந்த ஸ்மார்ட்போன் ஒப்போவிற்கு சொந்தமானது என்பதை வலுவாக குறிப்பிடுகிறது. மேலும், ஒப்போ ஒரு சதுர வடிவ செல்பீ கேமரா தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருவதாக வதந்திகள் பரவுவது இது முதல் முறையல்ல.
கடந்த பிப்ரவரியில், ஹூவாய் மற்றும் ஒப்போ ஆகிய இரண்டு நிறுவனங்களும் 1:1 சதுர சென்சார்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எதிர்கால செல்பீ கேமராக்களுக்காக அவற்றை கருத்தில் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பிடத்தக்க வண்ணம் அனைத்து ஐபோன் 17 மாடல்களும் 24எம்பி சதுர சென்சார்யை தான் பயன்படுத்துகின்றன.
ஒப்போ 100எம்பி சொல்யூஷனை சோதிப்பது, இன்னும் ஹை-ரெசல்யூஷன் கொண்ட செல்பீக்கள் மற்றும் அதிக டீட்டெயில் ஆன வீடியோ ரெக்கார்டிங்களுக்கு வழிவகுக்கும். தற்போதைக்கு, இந்த சென்சார் குறித்தோ அல்லது எந்த ஸ்மார்ட்போன் இதை முதலில் பயன்படுத்தக்கூடும் என்பது குறித்தோ ஒப்போ நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. புதிய தகவல்கள் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, கடந்த மாதம் ஒப்போ எப்33 5ஜி (Oppo F33 5G) மற்றும் ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி (Oppo F33 Pro 5G) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.34,999 மற்றும் ரூ.37,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications