"வேற லெவல்" செல்பீக்களை உறுதி செய்யும் ஒப்போ எப்5; வேறென்ன அம்சங்கள்.?

|

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஒப்போ, இந்தியாவில் மேலும் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை பெறவும் அவ்வண்ணமே அதன் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது, அது சார்ந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதில் குறிப்பிடத் தக்க ஒரு ஸ்மார்ட்போனாக, வருகிற நவம்பர் 2-ஆம் தேதி அன்று இந்திய கடைகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒப்போ எப்5 திகழ்கிறது. ஒப்போ எப்5 ஆனது நிறுவனத்தின் சமீபத்திய செல்பீ அம்சத்தினை மையாக கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாகும்.

திரை தீர்மானம்

திரை தீர்மானம்

இது புதிய 18: 9 விகிதம் என்ற திரை அளவை கொண்டு வெளியாகும் முதல் ஒப்போ கருவி இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.உடன் 2160 x 1080 பிக்ஸல் என்ற திரை தீர்மானம் கொண்ட ஒரு 6-அங்குல முழுஎச்டி+ டிஸ்பிளே கொண்டு வரலாமென கூறப்படுகிறது.

பெஸல்லெஸ் வடிவமைப்பு

பெஸல்லெஸ் வடிவமைப்பு

டிஸ்பிளேவின் அனுபவத்தை அதிகரிக்கும் வண்ணம் இக்கருவி கிட்டதட்ட ஒரு பெஸல்லெஸ் வடிவமைப்பு ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம். இருப்பினும் கூட ஒரு சிறிய தோற்றத்தை மற்றும் வசதியான பிடிமானத்தை வழங்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

உயரமான திரை விகிதம்

உயரமான திரை விகிதம்

வரவிருக்கும் ஒப்போ எப்5 ஆனது கேமிங், இணைய உலாவுதல், வாசிப்பு மற்றும் வீடியோ பின்னணி ஆகியவற்றிற்கான ஒரு தகுதி வாய்ந்த கைபேசியை உருவாக்கி கொண்டிருக்கிறது. மேலும் இதன் உயரமான 18: 9 விகித திரை முற்றிலும் புதியதொரு செல்பீ அனுபவத்தை உள்ளடக்கிய தொழில்நுட்பம் ஒன்றையும் வழங்குகிறது.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்

அதாவது ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் செல்பீக்கள் மூலம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவு திறனை முதன்முறையாக அனுபவிக்க போகிறார்கள். வரவிருக்கும் ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் கருவியானது உங்களின் தினசரி காட்சிகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வண்ணம் செயலாற்றும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பியூட்டிப்பை

மேம்படுத்தப்பட்ட பியூட்டிப்பை

வெளியாகும் புதிய செல்பீ எக்ஸ்பெர்ட் சாதனமான ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் முன்னணி கேமராவில் மேம்படுத்தப்பட்ட பியூட்டிப்பை தொழில்நுட்பத்துடன் இணைந்த செயற்கை நுண்ணறிவானது சிக்கலான செல்பீ வழிமுறைகளை பயன்படுத்தும் அதன் விளைவாக செல்பீக்கள் வெளியீட்டை மேம்படுத்த முடியும்.

இயந்திர கற்றல் தொழில்நுட்பம்

இயந்திர கற்றல் தொழில்நுட்பம்

இதுவரையிலாக, பயனர்களின் மென்பொருள் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதால், ஒப்போ எப் 5 அதன் செல்பீக்களில் அழகு சேர்க்கும் வகையில், அதன் உள்ளுணர்வு இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இரண்டு மாதிரி

இரண்டு மாதிரி

ஒப்போ எப்5 சாதனத்தின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என்ற இரண்டு மாதிரிகளில் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது 64ஜிபு உள்ளடக்க சேமிப்பும், இரண்டாவது மாறுபாடு 128ஜிபி உள்ளடக்க சேமிப்பும் கொண்டு வரலாம்.

க்வால்காம் ஸ்னாப்ட்ராகன்

க்வால்காம் ஸ்னாப்ட்ராகன்

மற்ற வதந்திகளின்படி இந்த புதிய ஒப்போ எப்5 ஆனது, க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 எஸ்ஓசி கொண்டு அதன் செயலாக்க பணிகளை கவனித்துக்கொள்ளும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7 நௌவ்கட் இயக்கமுறைமையின் கீழ் இயங்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி &  நிற வகைகள்

பேட்டரி & நிற வகைகள்

ஒரு 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுமென எதிரிபார்க்கப்படும் ஒப்போ எப்5 ஆனது இந்தியாவில் தங்கம், சிவப்பு மற்றும் கருப்பு நிற வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
OPPO to step up the selfie game with the new AI Powered Selfie Expert smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X