OPPO ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் எல்லோருக்கும் ஒரு முக்கிய அலெர்ட்!

|

உங்களிடம் ஒப்போ ஸ்மார்ட்போன் இருந்தாலும் சரி.. அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் ஒப்போ மாடலை பயன்படுத்துகிறார்கள் என்றாலும் சரி.. இல்லையேல் நீங்கள் அடுத்ததாக வாங்க போகும் புதிய போன் OPPO பிராண்ட் ஆக இருந்தாலும் சரி..

இப்படி எதுவாக இருந்தாலும் சரி.. இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

ரீடெயில் பாக்ஸை திறந்து பார்த்தால்?

ரீடெயில் பாக்ஸை திறந்து பார்த்தால்?

உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தத்தம் ஹேண்ட்செட்களுடன் சார்ஜர் அனுப்புவதை "மெல்ல மெல்ல" நிறுத்தி வருகிறது.

அதாவது நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கினால், அந்த ஸ்மார்ட்போனை "சுமந்து வரும்" ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இருக்காது!

நியாயமான விலைக்கு உலகின் முதல் 17.3-inch ஃபோல்டபிள் லேப்டாப் அறிமுகம்!நியாயமான விலைக்கு உலகின் முதல் 17.3-inch ஃபோல்டபிள் லேப்டாப் அறிமுகம்!

சில நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.. ஆனால் Oppo-வோ?

சில நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.. ஆனால் Oppo-வோ?

நிறைய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை 'ஸ்கிப்' செய்யும் (புறக்கணிக்கும்) மறுகையில், இந்த ​​​​போக்கைப் பின்பற்றாத சில உற்பத்தியாளர்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அந்த பட்டியலில் உள்ள ஒரு நிறுவனம் தான் - ஒப்போ. இந்நிறுவனம் இன்னுமும் ரீடெயில் பாக்ஸ்களில் சார்ஜர்களை பேக் செய்து, கொடுத்து வருகிறது; ஆனால் அது விரைவில் மாற உள்ளது.

நீங்கள் அடுத்தமுறையும் Oppo போன் வாங்கினால்?

நீங்கள் அடுத்தமுறையும் Oppo போன் வாங்கினால்?

ஆம்! நீங்கள் ஒரு புதிய ஒப்போ ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால், அந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் ஒரு சார்ஜர் இல்லாமல் போக நிறைய வாய்ப்பு உள்ளது.

இன்றோ, நாளையோ அல்லது இன்னும் சில காலங்களுக்கு, நீங்கள் ஆர்டர் செய்யும் ஒப்போ ஸ்மார்ட்போனில் சார்ஜர் இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் கூடிய விரைவில் இந்த போக்கு மாறும்!

ஸ்மார்ட் வாட்ச் அலெர்ட்! செப்.7 வரை பொறுமை அவசியம்! ஏனென்றால்?ஸ்மார்ட் வாட்ச் அலெர்ட்! செப்.7 வரை பொறுமை அவசியம்! ஏனென்றால்?

சரியாக எப்போது முதல் சார்ஜர்கள் அகற்றப்படும்?

சரியாக எப்போது முதல் சார்ஜர்கள் அகற்றப்படும்?

ஆண்ட்ராய்டு போலீஸ் வழியாக வெளியான ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, ஒப்போ நிறுவனம் அடுத்த ஆண்டு, அதாவது 2023 ஆம் ஆண்டு முதல் தன் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை அனுப்புவதை நிறுத்த உள்ளது.

இது "கிட்டத்தட்ட" அதிகாரப்பூர்வமான ஒரு தகவல் ஆகும். ஏனெனில் இந்த தகவல் ஓப்போ நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனை மற்றும் சேவைகளின் துணைத் தலைவர் ஆன பில்லி ஜாங்கிடம் இருந்து வந்துள்ளது!

எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் சார்ஜர்கள் 'கட்' செய்யப்படும்?

எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் சார்ஜர்கள் 'கட்' செய்யப்படும்?

ஒப்போ நிறுவனமானது, அதன் "பல" தயாரிப்புகளில் இருந்து சார்ஜர்களை அகற்றும் என்று கூறுகிறது. அதாவது ஒப்போ நிறுவனத்தின் எல்லா தயாரிப்புகளிலுமே சார்ஜர்கள் நீக்கப்படாது என்று அர்த்தம்!

ஆக வரவிருக்கும் நாட்களில், எந்தெந்த ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்கள் அனுப்பப்படாது என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது.

கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!

SuperVOOC சார்ஜர்களுக்கு சிக்கல் இருக்காது!

SuperVOOC சார்ஜர்களுக்கு சிக்கல் இருக்காது!

மற்ற எல்லா உற்பத்தியாளர்களும் தத்தம் சார்ஜர்களை அகற்றும் போது, ஒப்போ நிறுவனம் ஏன் இன்னும் சார்ஜர்களை அகற்றவில்லை என்கிற கேள்விக்கு - "நுகர்வோர்களால் SuperVOOC சார்ஜர்களை அவ்வளவு எளிதாக அணுக முடியாது. எனவே நாங்கள் அதை பாக்ஸில் வைத்திருப்பதை உறுதி செய்வோம்" என்று ஒப்போ பதில் அளித்துள்ளது.

ஆக இப்போதைக்கு SuperVOOC சார்ஜர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது!

விரைவில் சார்ஜர்கள் தனித்தனியாக விற்கப்படும்!

விரைவில் சார்ஜர்கள் தனித்தனியாக விற்கப்படும்!

ஆம்! ஒரு ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் இருந்து சார்ஜர் நீக்கப்படும் பட்சத்தில், கைவசம் பழைய சார்ஜரை கொண்டிருக்காதவர்கள், புதிய சார்ஜரை கடையில் இருந்து தான் வாங்க வேண்டும். இதை நாங்கள் சொல்லவில்லை, ஒப்போவே சொல்கிறது!

"எங்கள் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதால், நாங்கள் சார்ஜர்களை பெட்டியிலிருந்து எடுத்து, அவைகளை கடைகளின் வழியாக விற்பனை செய்வோம். இதனால் எங்கள் வாடிக்கையாளர்கள் புதிய சார்ஜர்களை வாங்கலாம் மற்றும் அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை மேம்படுத்தும்போதும் கூட அவற்றை தொடர்ந்து பயன்படுத்த முடியும்" என்று ஒப்போ கூறி உள்ளது!

சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!

ஆனாலும் இது எல்லா சந்தைகளிலும் நடைமுறைக்கு வராது!

ஆனாலும் இது எல்லா சந்தைகளிலும் நடைமுறைக்கு வராது!

ஒப்போவின் "சார்ஜர் நீக்கம்" தொடர்பான இந்த நடவடிக்கையில் இன்னொரு சுவாரசியமான விடயமும் உள்ளது. அது என்னவென்றால் - இந்நிறுவனம் ஒவ்வொரு பிராந்தியத்திலும் சார்ஜர்களை அகற்றாது.

ஏற்கனவே வலுவான ரீடெயில் விற்பனையை சந்திக்கும் சந்தைகளில் மட்டுமே "இந்த நடவடிக்கை" கட்டவிழ்த்துவிடப்படும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Best Mobiles in India

English summary
Oppo Smartphones To Skip Charger Inside The Box

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X