3 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் விலை குறைத்த OPPO.. வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்

|

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன்களில் OPPO நிறுவனத்துக்கு பிரதான இடம் இருக்கிறது. பல்வேறு விலைப் பிரிவில் ஒப்போ நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற 3 ஸ்மார்ட்போன்களின் விலையை ஒப்போ குறைத்து அறிவித்துள்ளது.

பிரபல மாடல்களின் விலையை குறைத்த OPPO

பிரபல மாடல்களின் விலையை குறைத்த OPPO

ஒப்போ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன்களில் ஒன்று OPPO F21 Pro ஆகும். இதன் விலையை குறைத்து நிறுவனம் அறிவித்துள்ளது. இதுமட்டுமில்லை OPPO A55 மற்றும் OPPO A77 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையையும் ஒப்போ குறைத்து அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

3 ஸ்மார்ட்போன்களின் விலையை ஒப்போ குறைக்க காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் ஒப்போவின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளம்

ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளம்

OPPO F21 Pro, OPPO A55 மற்றும் OPPO A77 ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களின் விலையை ஒப்போ குறைத்துள்ளது.

ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த 3 ஸ்மார்ட்போன்களின் புதிய விலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் குறைக்கப்பட்ட புதிய விலைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

OPPO A55

OPPO A55

OPPO A55 ஸ்மார்ட்போனானது அக்டோபர் 2021 இல் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

குறைக்கப்பட்ட விலை விவரம்

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இன் விலை ரூ.15490 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இ்நத ஸ்மார்ட்போன் ரூ.14,499 என குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.17490 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 என குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்டாரி பிளாக் மற்றும் ரெயின்போ ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

தற்போதைய விலை விவரம்

தற்போதைய விலை விவரம்

இந்தியாவில் ஒப்போ F21 Pro மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.22,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்த மாடலின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒப்போ F21 Pro மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.21,999 என கிடைக்கிறது.

அதேபோல் ஒப்போ ஏ77 மாடலின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.15,999 என தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

OPPO F21 Pro சிறப்பம்சங்கள்

OPPO F21 Pro சிறப்பம்சங்கள்

OPPO F21 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

இதில் 64 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

OPPO A55

OPPO A55

OPPO A55 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

இதில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

OPPO A77 சிறப்பம்சங்கள்

OPPO A77 சிறப்பம்சங்கள்

OPPO A77 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு இந்த டிஸ்ப்ளேயில் இருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OPPO Slashed the prices of 3 super smartphones: Check the Model and New Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X