பட்ஜெட்வாசிகள் கவனத்திற்கு, மே 15 அன்று அமேசான்.இன் தளத்திற்கு செல்லவும்.!
நேற்று (செவ்வாயன்று) ஒப்போ நிறுவனம், அதன் புத்தம் புதிய பிராண்ட் ஆன ரியல்மீ (Realme) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
நேற்று (செவ்வாயன்று) ஒப்போ நிறுவனம், அதன் புத்தம் புதிய பிராண்ட் ஆன ரியல்மீ (Realme) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மேட் இன் இந்தியா துணை கொண்டு உருவாகும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது இ-காமர்ஸ் தளங்களில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்பதும், ரியல்மீ பிராண்டின் முதல் தயாரிப்பை பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியா விற்பனை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிமுகம் ஆகியுள்ள ரியல்மீ 1 ஸ்மார்ட்போன், ப்ளிப்கார்ட் மற்றும் சியாமியோ வம்புக்கு இழுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பது வெளிப்படை. வருகிற மே 15 அன்று அமேசான் இந்தியா தளத்தில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் ரியல்மீ 1 ஆனது ரூ.10,000/- தொடங்கி ரூ.20,000/- வரை என்கிற பட்ஜெட் புள்ளிக்குள் வெளியாகும். இது புதிய பிராண்டின், வெறும் ஒரு ஆரம்பகால அறிமுகம் தான், வரும் காலத்தில் கூடுதல் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை களம் இறக்கி விடவும் ஒப்போ திட்டமிட்டுள்ளது.
துல்லியமான விலை விவரங்கள்.?
ரியல்மீ 1 பற்றி இதுவரை அதிகம் தெரியவில்லை. இது கடந்த வாரம் சீனாவில் தொடங்கப்பட்ட ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் காணப்பட்ட முக்கோண-வெட்டு வடிவங்கள் மற்றும் ஒரு 'பிளாக் டயமண்ட்' பின்பக்க வடிவமைப்பை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. துல்லியமான விலை பற்றிய விவரங்கள் இல்லை என்றாலும் கூட, இது சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனுடன் போட்டியிடும் விலைப்புள்ளியில் தான் வெளியாகும்.
அறியாதோர்களுக்கு ரெட்மீ 5ஏ ஆனது, நாட்டில் ரூ.5,999/-கு வாங்க கிடைக்கிறது. இது ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com வழியாக மூலம் பிரத்தியேகமாக வாங்குவதற்கு கிடைக்கிறது.
ஒப்போ ஏ3-ன் பிரதான அம்சங்கள்.!
கடந்த வாரம் அறிமுகமான, ஒப்போ ஏ3 ஆனது சுமார் ரூ.21,000/- என்கிற அறிமுக விலையை கொண்டுள்ளது. பிளாக், பின்க், ரெட், மற்றும் சில்வர் உள்ளிட்ட பல வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை : இரட்டை சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான கலர் ஓஎஸ் 5.0, 19: 9 என்கிற திரை விகிதம் கொண்ட 6.2 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080x2280 பிக்ஸல்) LTPS டிஸ்பிளே, 4 ஜிபி ரேம், ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார், 8 மெகாபிக்சல் முன் பக்க கேமரா சென்சார், 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, ஆக்டா-கோர் மீடியா டெக் ஹெலியோ பி60 எஸ்ஓசி, 3400mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டு உள்ளது.
எனவே, ரியல்மீ 1 ஆனது, ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போனின் மலிவான பதிப்பாக வெளியாகவும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான கலர் ஓஎஸ் 5.0-ன் கீழ் இயங்கும், ஆனால் குறைவான அம்சங்களை கொண்டிருக்கும் என்று அர்த்தம்.


Click it and Unblock the Notifications