Subscribe to Gizbot

ஆண்களுக்கு ஒரு செல்பீ, பெண்களுக்கு வேறு மாதிரியான செல்பீ - கலக்கும் எப்5.!

Written By:

டிஎஸ்எல்ஆர் கேமிராக்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வெளியே சுற்றும் வண்ணம் தற்கால ஸ்மார்ட்போன் கேமிராக்கள் தரம் உயர்ந்துவிட்டது. சுவாரசியம் என்னவென்றால், அந்த தரம் மென்மேலும் உயரும் என்பது தான். தற்கால ஸ்மார்ட்போன்கள், டிஎஸ்எல்ஆர்-களுக்கு போட்டியாய் விரிவான படங்களை வழங்குவதோடு, ஆழமான வெளிச்சம், டைம்-லேப்ஸ், ஸ்லோ மோஷன்ம என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் வழங்குகிறது.

ஆண்களுக்கு ஒரு செல்பீ, பெண்களுக்கு வேறு மாதிரியான செல்பீ.!

ஸ்மார்ட்போன்களின் ரியர் கேமராக்களின் திறன் கணிசமான முறையில் முன்னேறியுள்ள நிலைப்பாட்டில், தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் செல்பீ கேமராக்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. செல்பீக்களின் மீது அதிக கவனம் மற்றும் செல்பீ கேமராவில் புதிய அம்சம் என்றாலே நமக்கு ஒப்போ நிறுவனம் தான் நினைவிற்குள் குதிக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அப்படி என்னதான் ஸ்பெஷல்.?

அப்படி என்னதான் ஸ்பெஷல்.?

அதற்கு மாற்றுக்கருத்தே எழாத வண்ணம் ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் அதன் எப்5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ நிறுவனத்தின் இந்த சமீபத்திய செல்பீ எக்ஸ்பெர்ட் ஆனது ரூ.19,990 (4 ஜிபி ரேம் மாறுபாடு) என்ற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. சமீபத்திய முன்னேற்றத்தின் உதவியுடன், செயற்கை நுண்ணறிவு பியூட்டி தொழில்நுட்பம் இடம்பெறும் முதல் ஸ்மார்ட்போனாக திகழும் இக்கருவியில் அப்படி என்னதான் ஸ்பெஷல்.?

சிறப்பான செல்பீக்களுக்கான மனித முகங்களின் ஆழமான பகுப்பாய்வு.!

சிறப்பான செல்பீக்களுக்கான மனித முகங்களின் ஆழமான பகுப்பாய்வு.!

ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் முன்னணி கேமராவில் "இயந்திர கற்றல்" தொழில்நுட்பம் இணைக்கப்பெற்றுள்ளது. இது தோல் நிறங்கள் மற்றும் மேனியின் நிறம், வயது, ஒரு படத்தில் உள்ள பொருட்கள் மற்றும் பாலினம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசங்களை அங்கீகரிக்கிறது. உடன் அதற்கிடையேயான ஒவ்வொரு விடயத்திற்கும் பொருத்தமான அழகுபடுத்தும் மேம்பாடுகளை செய்கிறது.

ஆண்களிடம் இருந்து பெண்கள்களை வேறுபடுத்தி கொள்ளும் திறன்.!

ஆண்களிடம் இருந்து பெண்கள்களை வேறுபடுத்தி கொள்ளும் திறன்.!

இதன் சிக்கலான படிமுறையானது ஆண்களிடம் இருந்து பெண்கள், மற்றும் பெரியவர்களிடம் இருந்து குழந்தைகளை வேறுபடுத்தி கொள்ளும் திறனை கொண்டுள்ளது மற்றும் தனிப்பட்ட செல்பீக்களையும் மேம்படுத்தும் பொருத்தமான நுட்ப விரிவாக்கங்களையும் உருவாக்குகிறது.

மொத்தம் 200-க்கும் மேற்பட்ட முகப்புள்ளிகளாய் பதிவுசெய்கிறது.!

மொத்தம் 200-க்கும் மேற்பட்ட முகப்புள்ளிகளாய் பதிவுசெய்கிறது.!

மொத்தமாக கூறினால் இதன் செல்பீ கேமராவனது அனைவர்க்கும் பொதுவான அம்சங்களை பயன்படுத்தாமல் ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பட்ட மற்றும் அவருக்கே உரிய இயற்கையான மேம்பாடுகளை நிகழ்த்தும். நீங்கள் ஒரு செல்பீயை கிளிக் செய்யும் போது, ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் ஏஐ (AI) பியூட்டி தொழில்நுட்பமானது உங்களின் முகம், கன்னம் அல்லது கீழ் தாடைகள் உள்ளிட்ட பல்வேறு மென்மையான முக அம்சங்களை மொத்தம் 200-க்கும் மேற்பட்ட முகப்புள்ளிகளாய் பதிவுசெய்கிறது.

தனிப்பயனாக்கப்பட்ட பியூட்டி எபெக்ட்ஸ்.!

தனிப்பயனாக்கப்பட்ட பியூட்டி எபெக்ட்ஸ்.!

இதுவரை நாம் பல்வேறு செல்பீ கேமராக்களில் பலதரப்பட்ட அழகுபடுத்தும் விளைவுகளைக் கண்டிருக்கிறோம். அந்த வடிகட்டிகள் ஒரு நிலையான செயல்முறையின் அழகு விளைவுகளை பயன்படுத்துகின்றனவே தவிர தொழில்நுட்ப ரீதியாக செல்பீக்களை மேம்படுத்தாது. பல வகையான முக வடிவங்கள், தோல் நிறங்கள் ஒரு பொதுவான அழகு விளைவுகளின் கீழ் பதிவாவது, எப்படி ஒரு சிறப்பான செல்பீ ஆகும்.?

துல்லியமான ஸ்கின் டோன் உறுதி செய்யப்படும்.!

துல்லியமான ஸ்கின் டோன் உறுதி செய்யப்படும்.!

அதனை மனதிற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஒப்போ எப்5 ஆனது பியூட்டி எபெக்ட்ஸ்களை பயன்படுத்துவதற்கு முன்னர் பகுப்பாய்வு ஒன்றை நிகழ்த்துகிறது. அதன் வழியாக, ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அழகு விளைவை கொடுபதின் மூலம் ஒரு முகத்தின் உண்மையான அழகை கைப்பற்றுகிறது. எப்போ எப்5 கொண்டு எந்த சூழலில், யார் செல்பீ எடுக்கிறார்கள் என்பது ஒரு விடயமே அல்ல. எல்லா செல்பீக்களிலுமே துல்லியமான ஸ்கின் டோன் உறுதி செய்யப்படும்.

ஒப்போவின்செல்பீ ஏஐ தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது.?

ஒப்போவின்செல்பீ ஏஐ தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது.?

முன்னர் குறிப்பிட்டபடி, ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவால் நபர்களின் முகங்களை வேறுபடுத்த முடியும். மனித முகங்களின் பாரிய உலகளாவிய படத்தொகுப்புடன் ஒப்பிடுவதன் மூலம் இந்த ஆழ்ந்த பகுப்பாவை கருவியின் இயந்திர கற்றல் நிகழ்த்தும்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனி தனி செல்பீ.!

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனி தனி செல்பீ.!

இதன் ஏஐ தொழில்நுட்பமானது, புகைப்படக் கலைஞர்களின் வழிகாட்டல் மற்றும் மேக்அப் ஆர்ட்டிஸ்ட்களின் வடிவமைப்புகளின் உதவியுடன்அனுதினமும் மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதன் சிக்கலான ஏஐ வழிமுறைகள் ஒப்பிட முடியாத அளவிலான செல்பீக்களை பதிவு செய்ய உதவும். இந்த ஏஐ தொழில்நுட்பம் ஆண்களின் முக வடிவங்கள், வளைவுகள் போன்ற விரிவான முக அம்சங்களையும், பெண்களுக்கு - யதார்த்தமான நிறம், புருவம் போன்ற பாரம்பரிய கூறுகள் ஆகியவைகளை தெளிவாக ஆராய்ந்து செல்பீக்கள் எடுக்க உதவும்.

50-க்கும் மேற்பட்ட காட்சி தேர்வுமுறை.!

50-க்கும் மேற்பட்ட காட்சி தேர்வுமுறை.!

ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனால் பயன்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பமானது, செல்பீ அனுபவத்தை மேம்படுத்த நிறுவனத்தின் விரிவான ஆர் & டி செயல்முறையை பயன்படுத்துகிறது. ஒரு கணக்கெடுப்படிப்பின் படி, வாடிக்கையாளர்கள் பொதுவாக 50-க்கும் மேற்பட்ட காட்சிகளின் கீழ் செல்பீ எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது வெவ்வேறு ஒளி, வெப்பநிலை மற்றும் வண்ண தொனியில் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த 50-கும் மேற்பட்ட காட்சி தேர்வுமுறைகளானது கருவியின் இயந்திர கற்றலுக்கு மிகவும் உதவும்.

ஒப்போ எப்5 கேமரா அம்சங்கள்.!

ஒப்போ எப்5 கேமரா அம்சங்கள்.!

ஒப்போ எப்5 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 20எம்பி செல்பே கேமரா கொண்டுள்ளது. இது ஒரு தீவிரமான எப்2.0 துளை மற்றும் 1/ 2.8" சென்சார் கொண்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் குறைந்த மின்னோட்ட நிலையில் கூட குறைந்த இரைச்சல் மிக்க சிறந்த படங்களை தயாரிக்கவும், படங்களில் அதிக தகவலை பெறவும் அனுமதிக்கிறது. உடன் பின்னணியில் பொக்கே விளைவைப் பயன்படுத்துவதற்கான திறனையும் கொண்டுள்ளது. ​​பின்புற கேமராவைப் பொறுத்தவரை, 16எம்பி கேமரா கொண்டுள்ளது. இது தனிப்பயனாக்கப்பட்ட சாமியின் ஐஎம்எக்ஸ்398 சென்சார் கொண்டுள்ளது. இது இருண்ட அமைப்புகளில் கூட பிரகாசமான மற்றும் மிகவும் துல்லியமான படங்களை எடுக்க உதவும் எப்1.8 துளை கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
OPPO's latest AI technology makes OPPO F5 a one-of-its kind Selfie Smartphone in the market. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot