அசத்தலான அம்சங்களுடன் ஒப்போ ரெனோ 6 Z ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரெனோ 6 Z ஸ்மார்ட்போனை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தனித்துவமான சிப்செட் வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த புதிய ஒப்போ ரெனோ 6 Z ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 6 Z ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த
புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த புதிய ரெனோ 6 Z ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 800U சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒப்போ ரெனோ 6 Z ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 6 Z ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
ஒப்போ ரெனோ 6 Z ஸ்மார்ட்போனில் 4310எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ரெனோ 6 Z ஸ்மார்ட்போனின் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ரெனோ 6 Z ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.30,900-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications