Home
Mobile

48எம்பி ரியர் கேமராவுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை யுஏஇ மற்றும் சிங்கப்பூர் சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சாதனம் விரைவில் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 48எம்பி ரியர் கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இப்போது ஒப்போ ரெனோ5 Z 5ஜி சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ5 Z 5ஜி

ஒப்போ ரெனோ5 Z 5ஜி

ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.43-இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு உள்ளிட் பல்வேறுஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 ஆண்ட்ராய்டு 11

ஆண்ட்ராய்டு 11

ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 800U எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ColorOS 11.1 UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ள்ளடக்க மெமரி

இந்த ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஒப்போ ரெனோ5 Z 5ஜி மாடலில் 4310 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வே

டூயல் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் + 5ஜி ஹெர்ட்ஸ்), புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ5 Z 5ஜி மாடல். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.30,030-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno5 Z 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X