ஸ்னாப்டிராகன் 765 5ஜி சிப்செட் வசதியுடன் ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், 64எம்பி ரியர் கேமரா, 4000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன். ஆனால் இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம்.

2400 × 1080 பிக்சல் தீர்மானம்
ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 × 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ ரெனோ5 ஏ மாடல்.

ஸ்னாப்டிராகன் 765 5ஜி சிப்செட்
இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 5ஜி சிப்செட் வசதி உடன் அட்ரினோ 620 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் ஒப்போ ரெனோ5 ஏ மாடல். மேலும் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா
ஒப்போ ரெனோ5 ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரி
குறிப்பாக ஒப்போ ரெனோ5 ஏ மாடலில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ5 ஏ மாடல். மேலும் கருப்பு மற்றும் நீல
நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் ஒப்போ ரெனோ5 ஏ மாடல் ஆனது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications