Home
Mobile

OPPO ஒரே போடு.. ரூ.4,699 ஆஃபரில் 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் தவற விடக்கூடாத தள்ளுபடி விலைக்கு ஓப்போ ரெனோ 16சி (OPPO Reno 16c) ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், அண்டர்வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படியான கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 7000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.46,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,699 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.42,300 பட்ஜெட்டில் இந்த ஓப்போ ரெனோ 16சி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

OPPO ஒரே போடு.. ரூ.4,699 ஆஃபரில் 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்!

ஓப்போ ரெனோ 16சி அம்சங்கள் (OPPO Reno 16c Specifications): 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது.

மாலி ஜி 615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஸ்சி32எச்எஸ் (SC32HS) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் பேக் செய்யப்பட்டு உள்ளது.

ஜிசி08ஏ8 (GC08A8) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சாம்சங் எஸ்5கேகேஎன்1 (Samsung S5KKN1) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மேலும், ஜிசி50எப்6 (GC50F6) சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேமராவுக்கும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கறது. ஆகவே, பிரீமியம் கேமரா அவுட்புட் கிடைக்கும்.

80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.58 எம்எம் தடிமன் கிடைக்கிறது. 195 கிராம் எடை கொடுத்துள்ளது. டைப்-சி சார்ஜிங் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அல்ட்ரா பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுத்துள்ளது. ஸ்டெல்லர் பர்பிள் (Stellar Purple), டிவைலைட் வயலெட் (Twilight Violet) மற்றும் ஸ்டார்ரி ஒயிட் (Starry White) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

மேலும், ஏஐ ரீகம்போஸ் (AI Recompose), ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ அன்பிளர் (AI Unblur) மற்றும் ஏஐ ஸ்டூடியோ (AI Studio) உள்ளிட்ட கேமரா பீச்சர்களை கொடுக்கிறது. ஏஐ ரீமிக்ஸ் கோலாஜ் (AI Remix Collage), பாப் கேம் & பாப்அவுட் 2.0 (Pop Cam & Popout 2.0) மற்றும் டூயல் வியூ வீடியோ 2.0 (Dual-View Video 2.0) பீச்சர்களும் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
OPPO Reno16c 5G Available At Rs 4699 Bank Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X