OPPO போட்டான் பாரு.. 200MP கேமரா.. 6700mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ஓப்போ ரெனோ 16 சீரிஸ் (OPPO Reno16 Series) மாடல்கள் வெளியாகிவிட்டன. இதில் ப்ரோ மாடலைவிட கம்மியான விலைக்கு 200 எம்பி மெயின் கேமரா, 6700mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்களுடன் ஓப்போ ரெனோ16 (OPPO Reno16) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இப்போது, சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கிறது. இதனாலேயே இந்தியாவில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த ஓப்போ ரெனோ16 ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விற்பனை விவரங்களுக்கு செல்லலாம்.

ஓப்போ ரெனோ16 அம்சங்கள் (OPPO Reno16 Specifications): 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி,1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்களையும் இந்த ஓப்போ ரெனோ16 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது.
200 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமராவில் எப்/1.8 அபெர்சர் கிடை்ககிறது. 24 எம்எ் போகல் லென்த், ஆட்டோ போகஸ் மற்றும் 2-ஆக்சிஸ் ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் எப்/2.0 அபெர்சர் மற்றும் 16 எம்எம் போகல் லென்த் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) உள்ளது.
50 எம்பி டெலிபோட்டோ கேமராவில் 3.5x ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 120x டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவில் எப்/2.0 அபெர்சர் மற்றும் ஆட்டோபோகஸ் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 4K அண்டர்வாட்டர் கேமரா ஷூட்டிங் (Underwater Camera Shooting) கிடைக்கிறது. வீடியோவில் 18x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 3.5x ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16.0 (ColorOS 16.0) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சூப்பர் (Octa Core MediaTek Dimensity 8550 Super) சிப்செட்டை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) கொடுத்துள்ளது. IP69K ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
ஓப்போ ரெனோ16 விலை (OPPO Reno16 Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49,041 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.56,052ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.54,651ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.60,257ஆக இருக்கிறது.
16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட்டின் விலை ரூ.68,667ஆக இருக்கிறது. இந்த விலைகள் சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விலைகளாக இருக்கிறது. ஆகவே, குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் மாறுப்படும். சீனாவில் வருகிற மே 29ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications