OPPO போட்ட போடு.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஓப்போ ரெனோ 16 சீரிஸ் 5ஜி (OPPO Reno16 Series 5G) மாடல்கள் மட்டுமல்லாமல், ஓப்போ எக்னோ ஏர்5 (OPPO Enco Air5) மாடலும் களமிறங்க இருக்கிறது. ஓப்போ இந்தியா நிறுவனமே, இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் கிடைக்க இருக்கின்றன.
சீன மார்கெட்டில் ஓப்போ ரெனோ 16 5ஜி மற்றும் ஓப்போ ரெனோ 16 ப்ரோ 5ஜி ஆகிய மாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மட்டுமல்லாமல் பர்ஃபாமென்ஸ் பீச்சர்களிலும் பட்டையை கிளப்பியதால், மற்ற மார்கெட்களிலும் எதிர்பார்ப்பு எகிறியது. ஜூலை மாதத்தில் இந்தியாவில் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்தன.

இதை உறுதி செய்யும்படி ஓப்போ நிறுவனமே, ஓப்போ ரெனோ 16 சீரிஸ் 5ஜி, ஓப்போ எக்னோ ஏர்5 ஆகிய மாடல்கள் விரைவில் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட தளங்களில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
சீனாவில் ஓப்போ ரெனோ 16 5ஜி மற்றும் ஓப்போ ரெனோ 16 ப்ரோ 5ஜி வெளியாகி இருந்தாலும், இந்தியாவில் கூடுதலாக மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், இங்கு பட்ஜெட்டில் வெளியாகும் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் ஓப்போ ரெனோ 16சி (OPPO Reno 16c) கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், ஓப்போ ரெனோ 16 ப்ரோ மினி (OPPO Reno 16 Pro Mini) மாடலும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்திய மார்கெட்டில் வெளியாகும் முதலாவது ஹோலோவெர்ஸ் 3டி டிசைன் (HoloVerse 3D Design) கொண்ட மாடலாக இருக்கப் போகிறது. இந்த டிசைனில் ஸ்டார்ரி ஒயிட் (Starry White) கலரை எதிர்பார்க்கலாம். டூயல் லேயருடன் 3டி பாப் பிளானட் லுக்கை பார்க்கலாம்.
ப்ளோட்டிங் 3டி கிளிட்டர் (Floating 3D Glitter) பினிஷிங் கொண்ட டைனாமிக் ஸ்டெல்லர் ரிங் (Dynamic Stellar Ring) பேக் பேனல் டிசைனை கொடுக்கிறது. ஸ்டார்ரி ஒயிட் மட்டுமல்லாமல், டிவைலைட் வயலெட் (Twilight Violet), ஸ்டெல்லர் பர்பிள் (Stellar Purple) கலர்களிலும் கிடைக்க இருக்கிறது. இந்த சீரிஸ் மாடல்களில் ஏஐ ஸ்னாப் ஸ்கை (AI Snap Key) கிடைக்க இருக்கிறது.
ஏஐ மைண்ட் பைலட் (AI Mind Pilot), மைண்ட் ஸ்பேஸ் (Mind Space) சப்போர்ட்கள் கிடைக்கின்றன. IP66, IP68, IP69, மற்றும் IP69K ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, க்ளோவ் டச் (Glove Touch) மட்டுமல்லாமல், ஸ்பிளாஷ் டச் (Splash Touch) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ரெனோ 16 சீரிஸ் 5ஜி மாடல்கள் இருக்கப் போகிறது.
இந்த ரெனோ 16 ஸ்மார்ட்போனில் 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 8.22 எம்எம் தடிமன் மற்றும் 182 கிராம் எடை உள்ளது. ஓப்போ ரெனோ 16சி ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. சீன மார்கெட்டில் இந்த மாடல்களில் 200 எம்பி கேமரா, 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங் வரையில் பீச்சர்களை கொடுத்துள்ளது. இங்கும் எதிர்பார்க்கலாம். எக்னோ ஏர்5 மாடலில் ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1) கிடைக்க இருக்கிறது. ஜூலை மாதத்தில் முதல் வாரத்தில் இந்த மாடல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. ரூ.50,000 பட்ஜெட்டுக்குள் ஆரம்ப வேரியண்ட் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications