Home
Mobile

செஞ்சி விட்ட OPPO.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ (OPPO), தனது புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன்களான ஒப்போ ரெனோ16 சீரிஸ் (OPPO Reno16 Series) மாடல்களை வருகிற மே 25 அன்று அறிமுகம் செய்ய உள்ளது. அறிமுக தேதி நெருங்கி வரும் வேளையில், இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் கேமரா விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஒப்போ வெளியிட்டுள்ள புதிய போஸ்டரின் படி, ஓப்போ ரெனோ16 மற்றும் ஓப்போ ரெனோ16 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களுமே ஒரே மாதிரியான மெகாபிக்சல் கொண்ட கேமரா டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெற்றுள்ளன. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது.

செஞ்சி விட்ட OPPO.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

இதே கேமரா செட்டப் ஓப்போ ரெனோ15 சீரிஸ் (OPPO Reno15 Series) மாடல்களிலும் கிடைத்தது. ஆகவே, கேமராவில் பெரிய மாற்றங்களை பார்க்க முடியவில்லை. இருப்பினும், பீச்சர்கள் மற்றும் சென்சார்களில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. மற்ற பீச்சர்கள் பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன. அதிக பேட்டரி கேபாசிட்டியை பார்க்க முடிகிறது.

ஒப்போ ரெனோ16 மற்றும் ரெனோ 16ப்ரோ அம்சங்கள்:
டிஸ்பிளே (Display): ஓப்போ ரெனோ16 மாடலில் 6.32 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே, 1.5K ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஓப்போ ரெனோ16 ப்ரோ ஸ்மார்ட்போனில் பெரிய 6.78 இன்ச் OLED டிஸ்பிளே, 1.5K ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

ப்ராசஸர் (Processor): ரெனோ16 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8550 (Octa Core MediaTek Dimensity 8550) கிடைக்கிறது. ரெனோ16 ப்ரோ மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் கலர்ஓஎஸ் கிடைக்க இருக்கிறது.

பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging): ரெனோ 16 ஸ்மார்ட்போனில் 6700mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஓப்போ ரெனோ16 ப்ரோ ஸ்மார்ட்போனில் 7000mAh மெகா பேட்டரி மற்றும் 80W வயர்டு சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஸ்டோரேஜ் மற்றும் கலர்கள் (Storage & Colors): இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்களில் கிடைக்க உள்ளன. ஹார்ட்‌பீட் ஸ்டார் (ஒயிட்), மிட்நைட் பிளாக் ஆகிய பொதுவான கலர்களில் கிடைக்க இருக்கின்றன.

ரெனோ 16 ஸ்மார்ட்போனில் கேலக்ஸி பர்பிள் கலர் வேரியண்ட் பிரத்யேகமாக கிடைக்க இருக்கின்றன. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 1 ஜிபி மெமரி ஆப்ஷன்களும் கிடைக்க இருக்கிறது. ஓப்போ ரெனோ16 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் ட்ரீம் ப்ளூ என்னும் பிரத்யேக கலர் கிடைக்க இருக்கிறது. இதில் கேமரா பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே.

சீன அறிமுகத்தை தொடர்ந்து, இந்த ரெனோ 16சீரிஸ் மாடல்கள் குளோபல் மார்கெட்டில் வெளியாவதற்கான சான்றிதழ்களையும் பெற தொடங்கியுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் அறிமுகத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஓப்போ ரெனோ15 சீரிஸ் இங்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OPPO Reno16 Reno16 Pro With 200MP Main 50MP UW 50MP Telephoto Camera Setup Confirmed Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X