200MP அண்டர்வாட்டர் கேமரா.. IP69K ரேட்டிங்.. 7000mAh பேட்டரி.. புது OPPO போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி அண்டர்வாட்டர் போட்டோகிராபி கேமரா கொண்ட மாடலாக ஓப்போ ரெனோ16 ப்ரோ (OPPO Reno16 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களையும் கொடுத்துள்ளது. இந்த ஓப்போ ரெனோ16 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ஓப்போ ரெனோ16 (OPPO Reno16), ஓப்போ ரெனோ16 ப்ரோ (OPPO Reno16 Pro) மற்றும் ஓப்போ பேட் 6 (OPPO Pad 6) ஆகிய மாடல்கள் களமிறங்கி இருக்கின்றன. இதில் ஓப்போ ரெனோ16 ப்ரோ ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரியை கொடுத்தது மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங்கை பேக் செய்துள்ளது. இந்த ரேட்டிங் அண்டர்வாட்டர் பேட்டோகிராபி கொடுக்கிறது.

இதுபோக சூப்பர் கிளியர் லைவ் போர்ட்ராய்டு மோட் (Super Clear Live Portrait Mode), நேச்சுரல் டோன் என்ஜின் (Natural Tone Engine) போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்களையும் இந்த ஓப்போ ரெனோ16 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் கிடைக்கின்றன.
ஓப்போ ரெனோ16 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno16 Pro Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.78 இன்ச் (1272 x 2772 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது.
1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மெயின் கேமராவில் கிம்பல் ஓஐஎஸ் மற்றும் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. டெலிபோட்டோவில் 3.5x ஆப்டிகல் ஜூமிங், 120x டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. IP69K ரேட்டிங்குடன் அண்டர்வாட்டர் போட்டோகிராபி கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.63,056 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.68,663 ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட்டின் விலை ரூ.74,269 ஆகவும் இருக்கிறது. ஹார்ட்பீட் ஒயிட் (Heartbeat White), மூன்லைட் பிளாக் (Moonlight Black) மற்றும் ட்ரீம் ப்ளூ (Dream Blue) கலர்களில் கிடைக்க இருக்கிறது.
வருகிற மே 29ஆம் தேதி சீன மார்கெட்டில் விற்பனை தொடங்குகிறது. ஆகவே, ஜூன் மாதத்தில் குளோபல் வெளியீடு குறித்த விவரங்கள் தெரியவரும். இந்தியாவில் ஓப்போ ரெனோ15, ஓப்போ ரெனோ15 ப்ரோ மாடல்கள் கிடைக்கின்றன. ஆகவே, இந்த ஓப்போ ரெனோ16 மற்றும் ஓப்போ ரெனோ16 ப்ரோ மாடல்களையும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications