OPPO ஒரே பேடு.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. புதுசா 2 மாடல்கள்.. எந்த சீரிஸ்?
ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ16 சீரிஸ் (OPPO Reno16 Series) மாடல்கள் வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் மட்டுமல்லாமல், புதிய டேப்லெட் மற்றும் இயர்பட்ஸ் மாடல்களும் வெளியாக இருக்கின்றன. இதனால், ஓப்போ ஸ்மார்ட்போன் பிரியர்கள் டபுள் குஷியில் இருக்கின்றனர். இந்த மாடல்களின் விவரங்களை தெரிவித்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் வருகிற மே 25ஆம் தேதியில் ஓப்போ ரெனோ16 சீரிஸ் வெளியாக உள்ளது. ஓப்போ ரெனோ16 5ஜி (OPPO Reno16 5G) மற்றும் ஓப்போ ரெனோ16 ப்ரோ 5ஜி (OPPO Reno16 Pro 5G) ஆகிய மாடல்கள் களமிறங்க இருக்கின்றன. மேலும், ஓப்போ பேட் ஏர்5 (OPPO Pad Air5) மற்றும் ஓப்போ எக்னோ ஏர்5எஸ் (OPPO Enco Air5s) வெளியாக இருக்கிறது.

இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ15 5ஜி மற்றும் ஓப்போ ரெனோ15 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி கேமரா பிரியர்களிடையே வரவேற்பை பெற்றது. சீனாவில் வெளியாகிய பிறகே இந்தியாவில் கிடைத்தது. ஆகவே, இந்த மாடல்களும் ஓரிரு மாதங்களில் இந்தியாவுக்கு வரும் என்பதால், இப்போதே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
ஓப்போ ரெனோ16 அம்சங்கள் (OPPO Reno16 Specifications): 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.32 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8550 (MediaTek Dimensity 8550) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. 6700mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த ஓப்போ ரெனோ16 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஹார்ட் பீட் (Heart Beat), ட்ரீம் ப்ளூ (Dream Blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதே கலர்களில் ஓப்போ ரெனோ16 ப்ரோ ஸ்மார்ட்போனும் கிடைக்க இருக்கிறது.
ஓப்போ ரெனோ16 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno16 Pro Specifications): 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் எல்டிபிஓ அமோலெட் ( LTPO AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. பிளாட் டிசைனில் அல்ட்ரா-நேரவ் பெசல் (Ultra-narrow Bezel) கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை கொடுத்துள்ளது. சாம்சங் எச்பி5 சென்சாருடன் மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஓப்போ பேட் ஏர்5 மாடலில் 2.8K ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளே மற்றும் 10050mAh பேட்டரி கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. ஓப்போ எக்னோ ஏர்5எஸ் மாடலானது செமி-இன்-இயர் ட்ரூ வயர்லெஸ் இயர்போனாக வருகிறது. 48 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது.
இந்த பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகியவை மட்டுமே. ஓப்போ நிறுவனத்தால் அதிகரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. வெளியீட்டுக்கு ஒரு வாரமே இருப்பதால், அடுத்தடுத்து பீச்சர்களை ஓப்போ நிறுவனம் உறுதி செய்ய வாய்ப்புள்ளது. பிரீமியம் டிசைன் மற்றும் கேமரா பீச்சர்களுடன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications