பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.6,799 கம்மி ரேட்ல SONY கேமரா.. 6700mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ16 5ஜி (OPPO Reno16 5G) விற்பனை தொடங்கிவிட்டது. ஆரம்பமே ரூ.6,799 டிஸ்கவுண்ட் போக கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 6700mAh பேட்டரி, 80W சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்களுடன் இந்த ஓப்போ ரெனோ16 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.61,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.67,999ஆகவும் இருக்கிறது. இதில் 8 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.6,199 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.55,800 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 12 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.6,799 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.61,200 விலைக்கு இந்த டாப்-எண்ட் மாடலை வாங்கி கொள்ளலாம். மேலும், நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையிலும் இந்த ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. ஸ்டெல்லர் பர்பிள் (Stellar Purple), டிவைலைட் வயலெட் (Twilight Violet) மற்றும் ஸ்டார்ரி ஒயிட் (Starry White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஓப்போ ரெனோ16 5ஜி அம்சங்கள் (OPPO Reno16 5G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை இந்த ஓப்போ ரெனோ16 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது.
6.32 (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 3840Hz PWM டிம்மிங் மற்றும் ஓப்போ கிரிஸ்டல் குவார்டு (OPPO Crystal Guard) புரொடெக்சன் கிடைக்கிறது. ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் மிடில் ஃபிரேம் கிடைக்கிறது.
சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 3.5X பெரிஸ்கோப் ஜூம் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது.
4K ரெக்கார்டிங் மற்றும் ஜிசி50எப்6 சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ ரெனோ16 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இந்த ஓப்போ ரெனோ16 5ஜி மாடலுக்கு கிடைக்கின்றன.
IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மேலும், IP69K ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் வருகிறது. 6700mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 8.22 எம்எம் தடிமன் மற்றும் 182 கிராம் எடை வருகிறது. கலர் வேரியண்ட்களுக்கு ஏற்ப எடை மாறுகிறது.


Click it and Unblock the Notifications