முடிச்சு விட்ட ஓப்போ.. நவ.10-க்கு Reno15 சீரிஸ்.. 200MP கேமரா.. 16GB ரேம்.. OLED டிஸ்பிளே.. என்னென்ன மாடல்?
சீன மார்கெட்டில் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ ரெனோ15 சீரிஸ் (OPPO Reno15 Series) அதற்கும் முன்னதாகவே வெளியாக இருக்கிறது. இந்த முறை வெளியீட்டு தேதியை அந்த நிறுவனமே உறுதி செய்துள்ளதால், ஓப்போ பிரியர்கள் குஷியாகிவிட்டனர். 200 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் ஏற்கனவே கசிந்து, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ஓப்போ ரெனோ15 சீரிஸ்
இந்தியாவில் ஓப்போ ரெனோ14 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டுக்கு பிறகு ரெனோ சீரிஸ் மாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. பிரீமியம் டிசைன் மற்றும் குவாலிட்டி மட்டுமல்லாமல், கேமராவிலும் இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ப பீச்சர்கள் கிடைத்தன. இதனால் ஓப்போ ரெனோ15 சீரிஸ் மாடல்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இருப்பினும், சீன மார்கெட்டில் முதலில் களமிறங்கும். அதன் பிறகே இந்தியாவில் வெளியாகும். இதனால், சீன வெளியீட்டின் மீது ஒட்டுமொத்த கவனமும் சென்றது. முன்னதாக இந்த ரெனோ15 சீரிஸ் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த தேதியுடன் அதிகாரப்பூர்வ போஸ்டரும் மார்கெட்டில் கசிந்தது. ஆகவே, அந்த தேதியிலேயே எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால், ஓப்போ நிறுவனம், எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே வெளியாகும் என்பதை இப்போது உறுதி செய்துள்ளது. நவம்பர் 10ஆம் தேதி ஓப்போ ரெனோ15 சீரிஸ் வெளியாகும் என்று அதிகார்ப்பூர்வமாக உறுதி செய்துவிட்டது. ஆனால், மற்ற பீச்சர்களை உறுதி செய்யவில்லை. இருப்பினும் மார்கெட்டில் கசிந்த விவரங்களின்படி முக்கிய பீச்சர்களை பார்க்க முடிகிறது.
இந்த ஓப்போ ரெனோ15, ஓப்போ ரெனோ15 ப்ரோ மட்டுமல்லாமல், ஓப்போ ரெனோ15 மினி மற்றும் ஓப்போ ரெனோ15 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரெனோ15 மற்றும் ரெனோ15 ப்ரோ நிச்சயம் வெளியாகும். ஏனென்றால், முந்தைய ரெனோ சீரிஸ்கள் அப்படித்தான் வெளியாகி இருக்கின்றன. மினி, மேக்ஸ் கிடையாது.
ஆகவே, ஓப்போ நிறுவனம் உறுதி செய்யும் வரையில் மினி மற்றும் மேக்ஸ் மாடல்கள் வெறும் எதிர்பார்ப்பு மட்டும்தான். ஓஎல்இடி டிஸ்பிளே, 200 எம்பி கேமரா மற்றும் 16 ஜிபி ரேம் கிடைக்கும் என்று பீச்சர்கள் கசிந்துள்ளன. அதேபோல ரெனோ14 சிரீஸ் மாடல்களைவிட அதிக பேட்டரி இருக்கலாம். ஆகவே, 6500mAh பேட்டரிக்கு மேல் எதிர்பார்க்கலாம்.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ்
இந்தியாவில் அடுத்த மாதம் அல்லது வருகிற ஜனவரியில் இந்த சீரிஸ் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்த மாதம் 18ஆம் தேதியில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் (OPPO Find X9 Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) மாடல்கள் இருக்கின்றன.
குளோபல் மார்கெட்டில் கடந்த வாரம் வெளியாகின. இப்போது, இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. இதை ஓப்போ இந்தியா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அதோடு முக்கிய பீச்சர்களையும் உறுதி செய்துள்ளது. ஃபைண்ட் எக்ஸ்9 மாடலில் டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் ஸ்பேஸ் பிளாக் (Space Black) ஆகிய கலர்கள் வருகிறது.
அதேபோல ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடலில் சில்க் ஒயிட் (Silk White) மற்றும் டைட்டானியம் சார்கோல் (Titanium Charcoal) கலர்கள் உள்ளன. இந்த மாடல்களில் ஹசல்பிளாட் கேமரா மாஸ்டர் சிஸ்டம் (Hasselblad Master Camera System) கிடைக்கிறது. இதில் லூமோ இமேஜ் என்ஜின் (LUMO Image Engine) கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமராவை கொடுக்கிறது.
ஃபைண்ட் எக்ஸ்9 மாடலில் 6.59 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 7025mAh பேட்டரி மற்றும் ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே மற்றும் 7500mAh பேட்டரி வர இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (Dimensity 9500) சிப்செட் கிடைக்க இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








