Home
Mobile

OPPO ஒரே போடு.. ரூ.5999 ஆஃபர் ரேட்ல Mini போன்.. 200MP கேமரா.. 6200mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ16 சீரிஸ் மாடல்கள் வெளியாகியதை அடுத்து முந்தைய மாடல்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 200 எம்பி கேமரா, 6200mAh பேட்டரி, 80W சார்ஜிங்குடன் வெளியான ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி (OPPO Reno15 Pro Mini) ஸ்மார்ட்போன் அதிகப்படியான தள்ளுபடியில் கிடைக்கிறது.

இந்த ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.59,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.5,999 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.54,000 பட்ஜெட்டில் இந்த ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

OPPO ஒரே போடு.. ரூ.5999 ஆஃபர் ரேட்ல Mini போன்.. 200MP கேமரா.. மாடல்?

ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி சிறப்பம்சங்கள் (OPPO Reno15 Pro Mini Specifications): 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

ஆக்டா கோட் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8450 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி720 எம்சி7 ஜிபியு (Mali G720 MC7 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டூயல் வியூ வீடியோ (Dual-View Video) கிடைக்கிறது.

3.5x டெலிபோட்டோ லென்ஸ் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் கிடைக்கிறது. வீடியோ எடிட்டிங் 2.0 (Video Editing 2.0), ஏஐ பிளாஷ் போட்டோகிராபி 2.0 (AI Flash Photography 2.0), ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow) மற்றும் ப்யூர்டோன் டெக்னாலஜி (PureTone Technology) கிடைக்கிறது. மேலும், ஏஐ மோஷன் போட்டோ ஸ்லோவ்-மோ (AI Motion Photo Slow-Mo) கிடைக்கிறது.

இதுபோக ஏஐ மோஷன் போட்டோ எரைசர் (AI Motion Photo Eraser) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, கேமராவில் பட்டையை கிளப்பும்படி இந்த ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி கிடைக்கிறது. அதேபோல அண்டர்வாட்டர் போட்டோகிராபி கொடுக்கும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

மினி மாடலாக இருந்தும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6200mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 188 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. மேலும், 7.99 எம்எம் தடிமன் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

Best Mobiles in India

English summary
OPPO Reno15 Pro Mini Gets Rs 5999 Discount on Flipkart After OPPO Reno16 Series Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X