யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ15 ப்ரோ 5ஜி (OPPO Reno15 Pro 5G) மற்றும் ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி 5ஜி (OPPO Reno15 Pro Mini 5G) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 200 எம்பி கேமராவில் தொடங்கி டைனாமிக் ஸ்டெல்லர் ரிங் டிசைன் வரையில் அப்கிரேட்கள் இருக்கின்றன. இந்த ரெனோ15 ப்ரோ மாடல்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏரோஸ்பேஸ் கிரேடு ஃபிரேம், அல்டா-தின் ஸ்கிரீன் பெசல்கள் மற்றும் டைனாமிக் ஸ்டெல்லர் ரிங் டிசைன் கேமரா பம்பை ஒப்போ ரெனோ15 ப்ரோ 5ஜி கொண்டுள்ளது. 4K எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், வீடியோ எடிட்டிங் 2.0, 3.5எக்ஸ் டெலி ஜூமிங் மற்றும் 120எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கொடுக்கிறது. ஏஐ பவர்டு கூலிங் சிஸ்டம், ஹாலோப்யூஷன் டெக்னாலஜி வருகிறது.

ஏஐ எடிட்டர் 2.0 வழியாக புதிய பீச்சர்களை சேர்த்துள்ளது. ஏஐ போர்ட்ராய்டு குளோவ் (AI Portrait Glow), ஏஐ மோஷன் போட்டோ ஸ்லோவ்-மோ (AI Motion Photo Slow-Mo) மற்றும் பாப்அவுட் (Popout) கிடைக்கிறது. மேலும், ஏஐ மைண்ட் ஸ்பேஸ் (AI Mind Space), ஏஐ லிங்க் பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) போன்ற ஏகப்பட்ட ஏஐ பீச்சர்களை களமிறக்கி இருக்கிறது.
ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி 5ஜி அம்சங்கள் (OPPO Reno15 Pro Mini 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8450 4nm) சிப்செட்டை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 3840Hz டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா (OIS) + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி 3.5X பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6200mAh பேட்டரி கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது.
ஓப்போ ரெனோ15 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO Reno15 Pro 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் உள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், கலர்ஓஎஸ் 16 கிடைத்துள்ளது. 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 200 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது. மேலும், 50 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஆட்டோ போகஸ், 2 ஆக்சிஸ் ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

6500mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 50W சூப்பர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் இன்பிராரெட் சென்சார் உள்ளது.
ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி 5ஜி விலை (OPPO Reno15 Pro Mini 5G Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.64,999ஆகவும் இருக்கிறது. கோகோ பிரவுண் (Cocoa Brown) மற்றும் கிளாசியர் ஒயிட் (Glacier White) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.
ஓப்போ ரெனோ15 ப்ரோ 5ஜி விலை (OPPO Reno15 Pro 5G Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.67,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.72,999ஆகவும் இருக்கிறது. சன்செட் கோல்டு ( Sunset Gold) மற்றும் கோகோ பிரவுண் (Cocoa Brow) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஓப்போ ஆன்லைன் ஸ்டோரில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. வருகிற ஜனவரி 13ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 10 சதவீத உடனடி பேங்க் டிஸ்கவுண்ட், 15 மாதங்களுக்கு ஜீரோ டவுன்பேமெண்ட் மற்றும் 180 நாட்களுக்கு ஸ்கிரீன் டேமேஜ் பாதுகாப்பு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








