Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.4,799 ஆஃபரில் OPPO 5G போன்.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் ரெனோ சீரிஸ் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், கேமரா மற்றும் பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இதில் IP69 ரேட்டிங் கொண்ட மாடலாக வெளியாகிய ஓப்போ ரெனோ15 5ஜி (OPPO Reno15 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,799 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.43,200 விலைக்கு இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.4,799 ஆஃபரில் OPPO 5G போன்.. எந்த மாடல்?

ஓப்போ ரெனோ15 5ஜி அம்சங்கள் (OPPO Reno15 5G Specifications): 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பிளாட் டிஸ்பிளே டிசைனில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

ஓப்போ கிரிஸ்டல் கிளாஸ் (OPPO Crystal Shield Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பட்டையை கிளப்பும் அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொண்ட மாடலாக இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. கேமராவில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால், சோனி (SONY) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.4,799 ஆஃபரில் OPPO 5G போன்.. எந்த மாடல்?

8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மட்டுமல்லாமல், 50 எம்பி டெலிபோட்டோ கேமராவையும் இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த டெலிபோட்டோவுக்கும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மெயின் கேமராவை போலவே 50 எம்பி செல்பீ கேமராவுக்கும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை பேக் செய்துள்ளது. 7.77 எம்எம் தடிமன் உள்ளது.

197 கிராம் எடை கொடுத்துள்ளது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிளாசியர் ஒயிட் (Glacier White), டிவைலைட ப்ளூ (Twilight Blue) மற்றும் அரோரா ப்ளூ (Aurora Blue) ஆகிய கலர்களில் இந்த ஓப்போ ரெனோ15 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி உள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO Reno15 5G With 8GB RAM Gets Rs 4799 Bank Discount on Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X