ஜன.13 க்கு அப்புறம் இதுதான்.. OLED டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OPPO Reno15 5G சீரிஸ் அறிமுகம்!
ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ15 5ஜி (OPPO Reno15 5G) மற்றும் ஓப்போ ரெனோ15சி 5ஜி (OPPO Reno15c 5G) ஆகிய மாடல்கள் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்களில் முந்தைய வெர்ஷன்களை தூக்கி சாப்பிடும்படி இருக்கின்றன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ரெனோ15 5ஜி சீரிஸ் மாடல்களின் கீழ் 4 ஸ்மார்ட்போன்கள் களமிறங்கி இருக்கின்றன. இதில் ஓப்போ ரெனோ15 5ஜி மற்றும் ஓப்போ ரெனோ15சி 5ஜி மட்டுமல்லாமல், ஓப்போ ரெனோ15 ப்ரோ 5ஜி மற்றும் ஓப்போ ரெனோ15 ப்ரோ மினி 5ஜி மாடல்களும் வெளியாகி இருக்கின்றன. இதில் ரெனோ15 5ஜி, ரெனோ 15சி 5ஜி மாடல்களை பார்க்க இருக்கிறோம்.

ஓப்போ ரெனோ15 5ஜி அம்சங்கள் (OPPO Reno15 5G Specifications): 50 எம்பி டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கிறது. டெலிபோட்டோவில் 3.5எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 120எக்ஸ் ஜூமிங் கிடைக்கிறது.
மெயின் கேமராவுக்கு ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. ஏஐ பிளாஷ் போட்டோகிராபிக் 2.0 (AI Flash Photography 2.0), ஏஐ போர்ட்ராய்டு குளோவ் (AI Portrait Glow), ஏஐ மோஷன் போட்டோ எரைசர் (AI Motion Photo Eraser) மற்றும் ஏஐ மோஷன் போட்டோ ஸ்லோவ்-மோ (AI Motion Photo Slow-Mo) பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ப்யூர் டோன் டெக்னாலஜி (PureTone Technology) வருகிறது.
டிரிட்டி என்ஜின் கொண்ட கலர்ஓஎஸ் 16 (ColorOS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16 OS) கிடைக்கிறது. இதில் ஏஐ மைண்ட் பேஸ் (AI Mind Space) உள்ளது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை கொடுக்கிறது. ஏஐஹைப்பர் பூஸ்ட் 2.0 (AI HyperBoost 2.0) உள்ளது. 120 FPS கேமிங் அவுட்புட் கொண்டுள்ளது. 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

120 Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் ஸ்பிளாஷ் டச் (Splash Touch) சப்போர்ட் கிடைக்கிறது. IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 80W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. 50 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதேபோல பீச்சர்கள் ஓப்போ ரெனோ15சி 5ஜி ஸ்மார்ட்போனிலும் கிடைக்கிறது. ஆனால், பேட்டரி, சிப்செட் மாறுகிறது. ஆகவே, ரெனோ15சி 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இப்போது விலைகளை பார்க்கலாம்.

ஓப்போ ரெனோ15 5ஜி விலை (OPPO Reno15 5G Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.45,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.48,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.53,999ஆகவும் இருக்கிறது. 10 சதவீத உடனடி பேங்க் டிஸ்கவுண்ட், 12 மாதங்களுக்கு ஜீரோ டவுண் பேமெண்ட் கிடைக்கிறது. கிளேசியர் ஒயிட், அரோரா ப்ளூ, ட்விலைட் ப்ளூ கலர்கள் உள்ளன.
ஓப்போ ரெனோ15சி 5ஜி விலை (OPPO Reno15c 5G Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும் இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்து விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆனால், ஓப்போ ரெனோ15 5ஜி ஜனவரி 13ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








