OPPO Reno15 5G பர்ஸ்ட் லுக்: கவனமாக வடிவமைக்கப்பட்ட கேமராவை கொண்ட முதல் போன்!
OPPO நிறுவனத்தின் Reno சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்றாலே - கேமராவிற்கும், போட்டோகிராஃபிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மாடல்களால் நிரம்பி வழியும் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள OPPO Reno15 ஸ்மார்ட்போனை பயன்படுத்தி பார்த்த பின்னர் - இது அடுத்த கட்டத்திற்கு செல்வதையும், இதன் ஃபோகஸ் எப்போதும் இல்லாத அளவுக்கு ஷார்ப் ஆகவும், தேவையானதாவும் உள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது!

இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த தொடங்கியதுமே "தனித்து நிற்கும்" முதல் விஷயம் என்னவென்றால், ஒட்டுமொத்த அனுபவமும் - ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த அனுபவங்களாக இருப்பது தான். அதாவது அற்புதமான தருணங்களை கேமராவின் வழியாக - முன்னெப்போதும் இல்லாத வகையில் புகைப்படங்களாக பதிவு செய்வதில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் கவனம் செலுத்தவில்லை. மீதமுள்ள அம்சங்களிலும் அதிக கவனம் செலுத்துகிறது.
இந்த விலைப்பிரிவில் கிடைக்கும் மிகவும் வெர்சடைல் ஆன கேமரா செட்டப்
- OPPO Reno 15 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது
- ஓஐஎஸ், பிடிஏஎப் மற்றும் எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50எம்பி சோனி IMX882 ப்ரைமரி கேமரா
- எப்/2.8 அபெர்க்ஷர் ஓஐஎஸ், பிடிஏஎப் மற்றும் 3.5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி JN5 டெலிஃபோட்டோ கேமரா
- ஆட்டோஃபோகஸுடன் 8எம்பி OV08D அல்ட்ரா-வைட் கேமரா

முன்பக்கத்தில், 50எம்பி அல்ட்ரா-வைட் செல்பீ கேமரா உள்ளது. வைட் ஆன பீல்ட் ஆப் வியூ ஆனது க்ரூப் செல்பீக்கள் மற்றும் டிராவல் போட்டோக்களை இன்னும் எளிதாக வடிவமைக்க உதவுகிறது, அதே நேரத்தில் OPPO நிறுவனத்தின் கோல்டன் போர்ட்ரெய்ட் பெர்ஸ்பெக்டிவ் ஆனது பேஷியல் ப்ரோப்போஷன்களை நீட்டிக்காமல், அதை இயற்கையாகவே வைத்திருக்கிறது. மேலும் செல்பீக்கள் ஆக்ரோஷமான ஷார்ப்னஸ்-ஐ பெறாமல் க்ளீன் ஆனா ஷார்ப்னஸ்-ஐ பெறுகிறது. மேலும் க்ரூப் போட்டோக்களில் உள்ளவர்களின் முகங்களை தெளிவாக வைத்து இருப்பதையும் உறுதி செய்கிறது.

Reno 15 ஸ்மார்ட்போனின் கேமரா எக்ஸ்பீரியன்ஸை உண்மையிலேயே உயர்த்துவது என்னவென்றால், அது எவ்வளவு சீராக அவுட்புட்டை வழங்குகிறது என்பதுதான். கலர்ஸ் - சமநிலையில் காணப்படுகின்றன, எக்ஸ்போஷர் - லைட்டிங் நிலைமைகளுக்கு ஏற்ப நன்கு பொருந்துகிறது, மேலும் போர்ட்ரெயிட்கள் - இந்த விலைப்பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனையான "அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட தோற்றத்தை" தவிர்க்கின்றன. இந்திய லைட்டிங் மற்றும் ஸ்கின் டோன்களுக்கு ஏற்றவாறு ட்யூன் செய்யப்பட்ட OPPO நிறுவனத்தின் புதிய பியூர்டோன் தொழில்நுட்பத்திற்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இது - போட்டோக்களை துடிப்பானதாக ஆனால் நம்பக்கூடியதாக வைத்திருக்கிறது.

பாப்-அவுட்: உண்மையிலேயே ஒரு வேடிக்கையான அம்சம்!
இந்த ஸ்மார்ட்போனில் நாம் கவனிக்க வேண்டிய மிகவும் சுவாரஸ்யமான ஒரு அம்சம் - பாப்-அவுட் அம்சம் ஆகும். மேலோட்டமாக பார்த்தால் இது வெறுமனே ஒரு விஷூவல் கிம்மிக் போல் இருக்கும். ஆனால் போட்டோஸ் ஆப்பில் நேரடியாக பில்ட்-இன் செய்யப்பட்டுள்ள இந்த அம்சம் - போட்டோவில் உள்ள சப்ஜெக்ட்களை ஃபிரேமில் இருந்து வெளியேற்ற அனுமதிக்கிறது. இதன் கீழ் சப்ஜெக்ட் செப்ரேஷன் மிகவும் க்ளீன் ஆக தெரிகிறது, எட்ஜ்கள் நன்றாக கையாளப்படுகின்றன, மேலும் பைனல் அவுட் ஆனது எந்தவொரு கைமுறையான எடிட்டிங்கும் இல்லாமல் - சோஷியல் மீடியா போஸ்ட்களுக்கு தயாராக இருக்கும்படி உள்ளன.

மேலும் இது வெவ்வேறு தருணங்களில் கைப்பற்றப்பட்ட போட்டோக்கள் அல்லது மோஷன் போட்டோக்களை மிக்ஸ் செய்யும் திறனையும் வழங்குகிறது. இது பிளேஃபுல் ஆன ஸ்டோரிடெல்லிங்கிற்கு வழிவகுக்கிறது. இதை ஒரு சில கிளிக்குகளில் உருவாக்க முடியும். இது உடனடியாக பலனளிக்கும் ஒரு அம்சமாகவும் உள்ளது - கூடவே பயன்படுத்த எளிதானது, முக்கியமாக தனித்து நிற்கும் அளவுக்கு தனித்துவமானதாகவும் உள்ளது.

எளிமையும் நம்பகத்தன்மையும் கொண்ட வீடியோ
வீடியோவும் Reno15 அமைதியாக தன் திறனை வெளிப்படுத்தும் இன்னொரு துறையாகும். பல்வேறு ஃபோகல் நீளங்களில் 60fps-இல் 4K HDR வீடியோ ஆதரவு இருப்பதால், பதிவு செய்யும் போது லென்ஸ்களை மாற்றுவது மிகவும் இயல்பாகவும் தடையில்லாமலும் உணரப்படுகிறது. கைபிடியில் படம் பிடிக்கும் போது ஸ்டேபிலைசேஷன் நம்பகமாக செயல்படுகிறது, மேலும் ஷாட்டின் நடுவே ஒளிச்சூழல் மாறினாலும் நிறங்கள் ஒரே மாதிரியாகத் தக்கவைக்கப்படுகின்றன.
அதுவும் நீங்கள் பயணக் காட்சிகளைப் பதிவு செய்தாலும், சாதாரண வ்லாக்குகளை எடுத்தாலும் அல்லது அன்றாடத் தருணங்களைப் படம்பிடித்தாலும், ரெனோ15 நம்பகமானதாக உணர்கிறது - இது அமைப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், நீங்கள் எடுத்து உடனடியாகப் பதிவுசெய்யத் தொடங்கக்கூடிய ஒரு சாதனம்.
ஒப்போவின் டிசைன் எப்போது தனித்துவமாக உள்ளது. Reno15 போன் கையில் பிடிப்பதற்கு மெலிதாகவும், இலகுவாகவும், வசதியாகவும் இருக்கிறது. இதன் டிசைன் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரகாசிக்காமல், ஒளியை நுட்பமாகப் பிரதிபலிக்கின்றன. அதுவும் ஹோலோஃபியூஷன் தொழில்நுட்பத்தின் அறிமுகம், கண்ணாடியாலான பின்பகுதிக்கு ஆழத்தையும் அமைப்பையும் சேர்க்கிறது ஒப்போ நிறுவனம்.

குறிப்பாக இந்த போனின் பின்புற பேனலில் டைனமிக் ஸ்டெல்லர் ரிங் கேமரா அமைப்பு அழகாக தெரிகிறது. இதனால் கேமரா தொகுதி இணைக்கப்பட்டிருப்பதை விட ஒருங்கிணைந்ததாக உணரப்படுகிறது. கிளேசியர் ஒயிட், ட்விலைட் ப்ளூ மற்றும் அரோரா ப்ளூ போன்ற நிறங்கள் புதுமையாக இருந்தாலும் மிகைப்படுத்தப்படாத தோற்றத்துடன், தினசரி பயன்பாட்டிற்கு எளிதாகப் பொருந்துகின்றன.
மெலிந்த வடிவமைப்பு இருந்தாலும், Reno15 நம்பிக்கையளிக்கும் வகையில் உறுதியானதாக உணரப்படுகிறது. அதாவது OPPO-வின் ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடி, ஸ்பாஞ்ச் பயோனிக் குஷனிங் மற்றும் விண்வெளித் தர அலுமினிய ஃபிரேம் ஆகியவற்றுடன் இணைந்து, மன அமைதியை அளிக்கிறது. இதனுடன் IP66, IP68, IP69 தரச்சான்றிதழ்களும் இருப்பதால், கவனமாகப் பயன்படுத்தும் சூழ்நிலைகளுக்கு மட்டுமல்லாமல், தினசரி எதிர்பாராத சம்பவங்களையும் சமாளிக்கத் தயாரான சாதனமாக Reno15 தோன்றுகிறது.
சீராக இயங்கும் செயல்திறன்
ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 மூலம் இயக்கப்படும் Reno15, தினசரி பயன்பாட்டில் மென்மையாகவும் நம்பகமாகவும் உணரும் செயல்திறனை வழங்குகிறது. செயலிகள் விரைவாகத் திறக்கப்படுகின்றன, மல்டிடாஸ்கிங் சீராக நடைபெறுகிறது, மேலும் அதிகமான வெப்பம் சேராமல் கேமிங் அமர்வுகளும் நிலையாகத் தொடர்கின்றன. OPPO-வின் AI ஹைப்பர்பூஸ்ட் 2.0 மற்றும் AI அடாப்டிவ் டெம்பரேச்சர் கண்ட்ரோல் ஆகியவை பின்னணியில் அமைதியாக தங்கள் பணியைச் செய்து, செயல்திறன் ஒரே மாதிரியாக நிலைத்திருக்க உதவுகின்றன.
பேட்டரி ஆயுள் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாகும். 6,500எம்ஏஎச் பேட்டரி, பல்வேறு பயன்பாடுகளுடன் ஒரு நாள் முழுவதும் எளிதாக நீடிக்கிறது, மேலும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், விரைவாக சார்ஜ் செய்வதை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது. உண்மையில், நீங்கள் பேட்டரி அளவை பற்றி கவலைப்படுவதில் குறைந்த நேரத்தையும், போனை பயன்படுத்துவதில் அதிக நேரத்தையும் செலவிடுகிறீர்கள்.
கம்போர்ட்டுக்காக பில்ட் செய்யப்பட்ட ஒரு டிஸ்பிளே
Reno15 ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5கே ரெசொலூஷன் கொண்ட 6.59-இன்ச் அமோலெட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஸ்க்ரோலிங் ஸ்மூத்தாக இருக்கிறது, எழுத்துக்கள் தெளிவாக தெரிகின்றன, மேலும் அவுட்டோர் விசிபிலிட்டியும் நம்பகமானதாக உள்ளது. ஸ்பிளாஷ் டச் மற்றும் க்ளோவ்டு டச் போன்ற நடைமுறை அம்சங்களும் அன்றாட சூழ்நிலைகளில் பயன்பாட்டினை மேம்படுத்துகின்றன.
கலர்ஓஎஸ் 16 மெருகூட்டப்பட்டதாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் உணர வைக்கிறது
ஆண்ட்ராய்டு 16 பேஸ்டு கலர்ஓஎஸ் 16 ஐ இயக்கும் Reno15 ஆனது கிளீன் மற்றும் ரெஸ்பான்ஷிவ் சாப்ட்வேர் அனுபவத்தை வழங்குகிறது. ப்லக்ஸ் ஹோம் ஸ்கிரீன் மற்றும் அக்வா டைனாமிக்ஸ் போன்ற அம்சங்கள் நேவிகேஷனை உள்ளுணர்வாக ஆக்குகின்றன, அதே நேரத்தில் AI மைண்ட் ஸ்பேஸ், AI கால் சம்மரி மற்றும் சிஸ்டம்-லெவல் ஜெமினி இன்டிகிரேஷன் போன்ற AI டூல்கள் தேவையற்ற சிக்கலை விட உண்மையான வசதியை சேர்க்கின்றன.
தீர்ப்பு
OPPO Reno15 ஆனது ஒரு சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட, கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்மார்ட்போனாக ஒரு வலுவான ஆரம்ப தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது தொழில்நுட்ப தற்பெருமையை காட்டிலும், ஒரு நேர்த்தியான, நம்பகமான அனுபவத்தை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, போர்ட்ராய்டுகள், கிரியேடிவ் போட்டோகிராபி டூல்கள் மற்றும் ஒரு செம்மையான வடிவமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயனர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.
ஒரு தனிப்பட்ட டிவைஸாக, Reno15 ஆனது Reno தத்துவத்தின் ஒரு நம்பிக்கையான பரிணாம வளர்ச்சியாக தெரிகிறது. இது போட்டோகிராபி கலையை, அனுபவத்தின் மையத்தில் வைத்திருக்கிறது, அதே வேளையில், அன்றாடப் பயன்பாட்டை மேம்படுத்தும் அம்சங்களையும் கொடுத்துள்ளது.
விலை மற்றும் ஆஃபர்கள்
இந்தியாவில் OPPO நிறுவனமானது Reno15-க்கு நிர்ணயித்துள்ள விலை விவரங்கள் இதோ:
OPPO Reno15 8ஜிபி + 256ஜிபி: ரூ.45,999
OPPO Reno15 12ஜிபி + 256ஜிபி: ரூ.48,999
OPPO Reno15 12ஜிபி + 512ஜிபி: ரூ.53,999
அவைலபிலிட்டி: Reno15 ஆனது அமேசான், பிளிப்கார்ட், மெயின் லைன் ரீடெயில் அவுட்லெட்கள் மற்றும் OPPO இந்தியா இ-ஸ்டோர் முழுவதும் ஏற்கனவே வாங்குவதற்கு கிடைக்கிறது.
அறிமுக சலுகைகள்
- தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் வரையில் உடனடி கேஷ்பேக்
- 15 மாதங்கள் வரையிலான ஈஎம்ஐ திட்டங்களுடன் ஜீரோ டவுண் பேமெண்ட்
- முன்னணி எக்ஸ்சேஞ்ச் பார்ட்னர்களுடன் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்
- கூடுதல் கட்டணமின்றி 180 நாட்களுக்குத் ஸ்கிரீன் டேமேஜ் புரொடக்சன்
- 1 வருட எக்ஸ்டென்ட்டட் வாரண்டி
- ஒவ்வொரு Reno15 வாங்குதலிலும் OPPO எக்னோ பட்ஸ்3 ப்ரோபிளஸ்-க்கு 50 சதவீத தள்ளுபடி


Click it and Unblock the Notifications








