முரட்டு OPPO ப்ரோ.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொண்ட கேமரா சிஸ்டம், ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ரெனோ (OPPO Reno14) வெளியாகி இருக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 4என்எம் சிப்செட் கொண்ட இந்த ஓப்போ போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ 13 சீரிஸ் (OPPO Reno13 Series) மாடல்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கொடுத்ததால், விற்பனையிலும் சக்கைப்போடு போட்டது. இப்போது, சீன மார்கெட்டில் ஓப்போ ரெனோ 14 சீரிஸ் (OPPO Reno14 Series) வெளியாகி இருக்கிறது.

இதில் ஓப்போ ரெனோ14 மற்றும் ஓப்போ ரெனோ14 ப்ரோ (OPPO Reno14 Pro) மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஓப்போ ரெனோ14 மாடலானது, கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் டிசைனில் பட்டையை கிளப்பி இருக்கிறது. மெர்மெய்ட் என்னும் புதிய கலர் வேரியண்ட்டில் ஃபிஷ்டெயில் டிசைனில் வருகிறது. முழு பீச்சர்கள் எப்படி?
ஓப்போ ரெனோ14 அம்சங்கள் (OPPO Reno14 Specifications): இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. முந்தைய மாடல்களைவிட பர்ஃபாமென்ஸ் கூடுதலாக கிடைக்கும்படி ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட்டை கொடுக்கிறது.
ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) புரொடெக்சன் கொண்ட 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிளாட் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.

இதுபோக 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த ஓப்போ ரெனோ14 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி
மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்கிறது.
50 எம்பி வைடு-ஆங்கிள் மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் மற்றும் டெலிபோட்டோவில் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 3.5X ஆப்டிகல் ஜூமிங், 120X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 50 எம்பி ஆட்டோ போகஸ் செல்பீ கிடைக்கிறது.
இந்த கேமராவில் அண்டர் வாட்டர் போட்டோகிராபி கிடைக்கிறது. ஏனென்றால், IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP66 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. வழக்கம்போல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கொடுக்கிறது. ரீஃப் பிளாக், பினெலியா கிரீன் மற்றும் மெர்மெய்ட் ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
இந்த ஓப்போ ரெனோ14 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,245ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,620ஆக இருக்கிறது. இதே சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட விலையாகும். ஆகவே, மாற்றங்கள் இருக்கலாம். மே 23ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. அதன்பிறகு இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








