Home
Mobile

மிரளுது மார்கெட்.. 6200mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. 50MP டெலிபோட்டோ.. ஜூலை.4 உறுதி.. எந்த மாடல்?

ஏரோஸ்பேஸ்-கிரேடு மிடில் ஃபிரேம் மட்டுமல்லாமல், 50 எம்பி டெலிபோட்டோ கேமரா, 6200mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங், 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ரெனோ14 சீரிஸ் (OPPO Reno14 Series) இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி மற்றும் முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஓப்போ ரெனோ14 சீரிஸ் மாடல்களின் பீச்சர்கள், விற்பனை மற்றும் பட்ஜெட் குறித்த முழு விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ13 சீரிஸ் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இதற்கு அடுத்து ஓப்போ ரெனோ14 சீரிஸ் வெளியாக ரெடியாகிவிட்டது. ஜூலை 4ஆம் தேதியில் இந்த சீரிஸ் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று ஓப்போ இந்திய நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேபோல கேமரா, பேட்டரி, சிப்செட் போன்ற பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன.

மிரளுது மார்கெட்.. 6200mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. 50MP!

இதில் ஓப்போ ரெனோ12 5ஜி (OPPO Reno14 5G) மற்றும் ஓப்போ ரெனோ12 ப்ரோ 5ஜி (OPPO Reno14 Pro 5G) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஆனால், தனித்தனியே பீச்சர்கள் உறுதி செய்யப்படவில்லை. பொதுவாகவே பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, இந்த மாடல்கள் வெளியான பிறகே எந்த மாடலில் எந்த பீச்சர்கள் வரும் என்பது தெரியவரும்.

இப்போது, ஓப்போ இந்திய வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த ரெனோ13 சீரிஸ் மாடல்களில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 3.5X ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஏஐ எடிட்டர் 2.0 (AI Editor 2.0), ஏஐ லைவ் போட்டோ 2.0 (AI Livephoto 2.0) போன்ற பீச்சர்கள் கிடைக்க இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மீடியாடெக் டைன்சிட்டி 8450 எஸ்ஓசி (MediaTek Dimensity 8450 SoC) கிடைக்கிறது. வேப்பர் கூலிங் சேம்பருடன் 6200mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் சார்ஜிங் (SuperVOOC Charging) மற்றும் 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் (AirVOOC Wireless Charging) சார்ஜிங் கிடைக்கிறது.

மிரளுது மார்கெட்.. 6200mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. 50MP!

இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. ஓப்போ ரெனோ14 5ஜி சீரிஸ் ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. மேற்கண்ட சிப்செட், பேட்டரி மற்றும் ரேம் பீச்சர்களானது, குளோபல் மார்கெட்டில் வெளியான ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி மாடலுடன் அப்படியே பொருந்துகிறது. ஆகவே, அதே மாடலே இந்தியாவிலும் வெளியாக இருப்பது தெரிகிறது.

ஆகவே, அந்த குளோபல் மாடல்களின் முக்கிய பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். முதலில் ஓப்போ ரெனோ14 5ஜி போனை பார்க்கலாம். இதில் 6.59 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 18X டிஜிட்டல் ஜூமிங் உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளது. 6000mAh பேட்டரி, 80W சார்ஜிங் கிடைக்கிறது. ஓப்போ ரெனோ14 ப்ரோ 5ஜி போனின் குளோபல் வேரியண்ட்டில் 6.83 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி டெலிபோட்டோ உள்ளது.

மீடியாடெக் டைன்சிட்டி 8450 எஸ்ஓசி சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. 6200mAh பேட்டரி வருகிறது. ஆகவே, குளோபல் மார்கெட்டுக்கு கிடைத்த அதே பீச்சர்களுடன் இந்தியாவில் வெளியாக இருப்பது இந்த பீச்சர்களை வைத்து பார்க்கும்போது தெரிகிறது. அமேசான் பிரைம் டே விற்பனையில் இந்த சீரிஸ் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OPPO Reno14 Series With AI Portrait Camera To Launch India on July 3 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X