சம்பவம் குறிச்சாச்சு! 6200mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கொடுக்கும் மாடல்களாக ஓப்போ ரெனோ13 சீரிஸ் (OPPO Reno13 Series) இருந்தது. இதனாலேயே சீனாவில் வெளியான ஓப்போ ரெனோ14 சீரிஸ் (OPPO Reno14 Series) மாடல்கள் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்போது, இந்திய வெளியீட்டுக்கான டைம்-லைன் கசிந்துள்ளது. இதனால், மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் பிரியர்கள் வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். அப்படி என்ன இந்த ஓப்போ ரெனோ14 சீரிஸ் மாடல்களில் இருக்கிறது?
பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டியூரபிலிட்டி கொண்ட மாடல்களாக ஓப்போ ரெனோ14 சீரிஸ் சீன மார்கெட்டில் வெளியாகியது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் இருந்ததால், இந்திய உள்பட மற்ற மார்கெட்களிலும் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. குளோபல் வெளியீட்டுக்கு பிறகு அது தெரியவரும் என்று நினைத்த நேரத்தில் இந்திய வெளியீடு கசிந்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இந்த ஓப்போ ரெனோ14 சீரிஸ் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீன மார்கெட்டை போல ஓப்போ ரெனோ14 (OPPO Reno14) மற்றும் ஓப்போ ரெனோ14 ப்ரோ (OPPO Reno14 Pro) மாடல்கள் வெளியாவது உறுதியாகும். ஆனால், கலர், ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்களில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் பேர்ல் ஒயிட் (Pearl White) கலர் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இது 3டி பேட்டர்ன் டிசைனில் மெட்டல் ஃபிரேம் கொடுக்கும் கலர் வேரியண்ட்டாகும். மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, சீன வேரியண்ட்களின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ரெனோ14 போனானது, 12 ஜிபி ரேம் + 256 மெமரியுடன் ரூ.34,245 பட்ஜெட்டில் வெளியானது. இதில் 6.59 இன்ச் ஃபிளாட் அமோலெட் டிஸ்பிளே, ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் புரொடெக்சன், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்தது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8340 4என்எம் சிப்செட் வந்தது. அண்டர் வாட்டர் போட்டோகிராபி கிடைத்தது.
மேலும், 50 எம்பி மெயின் கேமரா, ஓஐஎஸ் டெக்னாலஜி, 4K வீடியோ கொண்ட டூயல் கேமரா சிஸ்டம் வந்தது. அதேபோல பெரிஸ்கோப் கேமரா, சாம்சங் ஜேஎன்5 சென்சாருடன் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைத்தது. IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் IP68 + IP66 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைத்தது. 80W சார்ஜிங் + 6000mAh பேட்டரி கிடைத்தது.
ஓப்போ ரெனோ14 ப்ரோ போனை பார்க்கையில், 6.83 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆகவே, முந்தைய மாடலைவிட கொஞ்சம் டிஸ்பிளே பெரியதாக இருக்கிறது. அதேபோல ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் சிப்செட் கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட் உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா உள்ளது. ஓஐஎஸ் + 4K ரெக்கார்டிங் உள்ளது. 6200mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. IP69 ரேட்டிங் முதல் IP68 மற்றும் IP66 ரேட்டிங் வருகிறது. ரூ.41,560 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கிறது. இந்தியாவிலும் இதே பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








